wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி படிவம் 5

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

பழமொழியை விடுபட்டச் சொல்லைக் கொண்டு நிறைவு செய்க.


முற்பகல் செய்யின் ____________________ விளையும்

a)

நற்பகல்

b)

பிற்பகல்

c)

நண்பகல்

2.

பழமொழியை விடுபட்டச் சொல்லைக் கொண்டு நிறைவு செய்க.


தன் ________________________ மண்ணுயிரையும் நினை

a)

உயிரைப்போல்

b)

உடலைப்போல்

c)

உறவைப்போல்

3.

பழமொழியை விடுபட்டச் சொல்லைக் கொண்டு நிறைவு செய்க.


துணை போனாலும் ______ போகாதே

a)

மணை

b)

விணை

c)

பிணை

4.

பழமொழியை விடுபட்டச் சொல்லைக் கொண்டு நிறைவு செய்க.


சைகை அறியாதவன் _________ அறியாதவன்

a)

சற்றும்

b)

பற்றும்

c)

கைபை

5.

பழமொழியை விடுபட்டச் சொல்லைக் கொண்டு நிறைவு செய்க.


------------------- கேடு நினைப்பான்

a)

கொடுவான்

b)

கொண்டான்

c)

கெடுவான்

6.

வாக்கியத்திற்கு ஏற்ற பழமொழியைத் தேர்ந்தெடு


குமரன் தான் சாலையில் கண்டெடுத்த நாய்க்குட்டியை அன்போடு வளர்த்தான்

a)

கெடுவான் கேடு நினைப்பான்

b)

சைகை அறியாதவன் சற்றும் அறியாதவன்

c)

தன் உயிரைப்போல் மண்ணுயிரையும் நினை

7.

வாக்கியத்திற்கு ஏற்ற பழமொழியைத் தேர்ந்தெடு


ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசு பெற்ற குமரனின் மேல் பொறாமை கொண்டு அவனைத் தள்ளிவிட நினைத்த கபிலன் தற்செயலாக கால்வாயில் விழுந்தான்.

a)

கெடுவான் கேடு நினைப்பான்

b)

சைகை அறியாதவன் சற்றும் அறியாதவன்

c)

தன் உயிரைப்போல் மண்ணுயிரையும் நினை

8.

வாக்கியத்திற்கு ஏற்ற பழமொழியைத் தேர்ந்தெடு


தனது உறவினர்கள் தங்கள் வீட்டிற்கு வருவதை விரும்பாமல் தன் மனைவி முகம் சுழித்ததைப் பலராமன் புரிந்து கொள்ளவில்லை.

a)

கெடுவான் கேடு நினைப்பான்

b)

சைகை அறியாதவன் சற்றும் அறியாதவன்

c)

தன் உயிரைப்போல் மண்ணுயிரையும் நினை

9.

வாக்கியத்திற்கு ஏற்ற பழமொழியைத் தேர்ந்தெடு.


பள்ளிப் பருவத்தில் சீதா தன் தோழிகளுக்குப் படிப்பில் உதவியதால் பிற்காலத்தில் அவள் சிரமப்பட்டபோது அவள் தோழிகள் அவளுக்கு உதவினர்.

a)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

b)

துணை போனாலும் பிணை போகாதே

c)

தன் உயிரைப்போல் மண்ணுயிரையும் நினை

10.

வாக்கியத்திற்கு ஏற்ற பழமொழியைத் தேர்ந்தெடு.


தன் நண்பன் வங்கியில் கடனுதவி பெறுவதற்குக் குமணன் உதவியதால், பின்னாளில் அவன் நண்பன் கடனைச் செலுத்தாதபோது குமணனுக்குத் துன்பம் ஏற்பட்டது.

a)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

b)

துணை போனாலும் பிணை போகாதே

c)

தன் உயிரைப்போல் மண்ணுயிரையும் நினை