wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

tamil

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

‘அறம் செய விரும்பு’ எனும் ஆத்திசூடியின் பொருள் என்ன?

a)

தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்ள வேண்டும்.

b)

கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.

c)

எந்த வேலையுமின்றி வெறுமனே இருப்பது இழிவாகும்.

2.

கீழ்க்காணும் குறளில் கோடிடப்பட்டுள்ள சீரின் பொருள் என்ன?


வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல

a)

தோல்வி

b)

சோதனை

c)

துன்பம்

3.

விளக்கத்திற்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.


ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்.

a)

புத்திமான் பலவான்

b)

அழுத பிள்ளை பால் குடிக்குõ

c)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

4.

நீதிநெறி விளக்கத்தை இயற்றியவர் யார்

a)

குமரகுருபர சுவாமிகள்

b)

சமண முனிவர்

c)

ஔவையார்

5.

திருக்குறளுக்குத் தொடர்புடைய வெற்றி வேற்கையைத் தெரிவு செய்க.


செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்

a)

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்

b)

செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்

c)

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே

6.

மரபுத்தொடருக்குத் தொடர்புடைய திருக்குறளைத் தெரிவு செய்க.


நாக்கு நீளுதல்



a)

அழுக்காறு அவாவெகுளி இனாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்

b)

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புத்தோல் போர்த்த உடம்பு

c)

இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

7.

போனதிசை எல்லார்க்கும் கள்ளனாய்’ எனும் செய்யுள் வரி விளக்கும் கருத்தைத் தெரிவு செய்க.

a)

ஏழு பிறப்பிலும் ஏழ்மை நிலையிலேயே வாழ வேண்டிய சூழல் ஏற்படும்

b)

ஏழு பிறப்பிலும் தொடர்ந்து வரும் பாவத்திற்கு ஆளாகித் தன்னிடம் அன்புக்கொண்ட அனைவருக்கும் பொல்லாதவனாக விளங்க நேரிடும்.

c)

தான் ஓடிப்போகும் இடங்களில் உள்ள அனைவரிடமும் திருடன் என்ற பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும்

8.

மேல் காணும் சூழலுக்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க

a)

நுண்ணிய கருமம் எண்ணித் துணிக

b)

சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்

c)

ஏவா மக்கள் மூவா மருந்து

9.

உரையாடலுக்கு ஏற்ற பழமொழியைத் தேர்ந்தெடு


அம்மா : மாலினி, நேற்று அப்பா கொடுத்த பணத்தை என்ன செய்தாய்?


மாலினி: அண்ணன் வாங்கித் தந்த உண்டியலில் சேமித்து வைத்துள்ளேன் அம்மா.


அம்மா : சிறுகச் சிறுகச் சேர்க்கின்ற ஒன்றே நாளடைவில் பேரளவாகப் பெருகிவிடும்.

நீ தொடர்ந்து சேமித்து வை.

a)

சிக்கனம் சீரளிக்கும்

b)

சிறு துளி பெரு வெள்ளம்

c)

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்

10.

கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்திற்குப் பொருத்தமான திருக்குறளைத் தெரிவு செய்க


பொறாமை, பேராசை, கோபம் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனப்படும்

a)

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்

b)

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது.

c)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்