NEW
Font size
Worksheetsஒத்துழைப்பு (01.09.2021)
Total questions: 10
Worksheet time: 5mins
நாம் நம் வசிப்பிடத்தில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளுக்கு நம்மால் முடிந்த உதவி செய்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
சரி
தவறு
நாம் சமுதாயத்தில் நம் இன மக்களோடு மட்டும் ஒத்துழைப்புக் கொடுத்து வாழலாம்.
சரி
தவறு
நாம் சமுதாயத்தில் அனைத்து மக்களிடமும் ஒன்றினைந்து வாழாமல் இருக்கலாம்.
சரி
தவறு
நாம் சமுதாயத்தில் விதிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றி மக்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
சரி
தவறு
கமலன் அனைத்து மக்களோடு சேர்ந்து அன்பு இல்லத்தின் சுவர்களுக்கு வெள்ளை அடிக்கும் சேவையைச் செய்தான்.
சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில் ஒத்துழைப்புச் செயல்
சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில் ஒத்துழைப்பைக் கடைப்பிடிக்காத செயல்
சர்வின் சமுதாயத்தில் பிறரின் மீது அக்கறை கொள்ளாமல் அனைவரிடமும் பேசாமல் இருந்தான்.
சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில் ஒத்துழைப்புச் செயல்
சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில் ஒத்துழைப்பைக் கடைப்பிடிக்காத செயல்
சீனப் புத்தாண்டன்று என் குடியிருப்புப் பகுதியில் ஒருவர் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட திறந்த இல்ல உபசரிப்பிற்காக அவரின் வீட்டை அழங்கரிக்க நான் உதவினேன்.
சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில் ஒத்துழைப்புச் செயல்
சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில் ஒத்துழைப்பைக் கடைப்பிடிக்காத செயல்
சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில் ஒத்துழைப்புச் செயலைத் தெரிவு செய்க.
சமுதாயத்தில் பிறரிடம் பேசாமல் இருத்தல்
துப்புரவுப் பணியில் கலந்துக் கொள்ளுதல்
நம் இன மக்களிடம் மட்டும் பேசி பழகுதல்
சமுதாயத்தில் அனைவரையும் கேலி செய்தல்
சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில் ஒத்துழைப்பைப் பின்பற்றாத செயலைத் தெரிவு செய்க.
சமுதாயத்தில் விதிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றுதல்
குழு விளையாட்டில் ஒற்றுமையாகச் செயல்படுதல்
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட்கள் கொடுத்து உதவுதல்
பிறரின் மீது அக்கறையின்றி ஆபத்து நேரங்களில் உதவாமல் இருத்தல்
இவற்றுள் எது சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில் ஒத்துழைப்புச் செயல்?
சமுதாயத்தில் அனைவரையும் மதிக்காமல் இருத்தல்
சமுதாயத்தினரிடையே ஒற்றுமையின்றி வாழுதல்
சமுதாயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்தல்
சமுதாயத்தில் பிறரின் மீது அக்கறையின்றி இருத்தல்
