NEW
Font size
Worksheetsஇயல் 5 செய்யுள் - திருக்குறள்
Total questions: 10
Worksheet time: 10mins
1. பெருஞ்செல்வம் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______
பெருஞ் + செல்வம்
பெருமை + செல்வம்
பெரும் + செல்வம்
பெரு + செல்வம்
2. பண்புடைமை - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
பண் + புடைமை
பண்பு + உடைமை
பண்பு + புடைமை
பண் + உடைமை
3. அதுஇன்றேல் சேர்த்து எழுதக் கிடைப்பது __________
அதுயின்றேல்
அதுவன்றேல்
அதுவின்றேல்
அதுஇன்றேல்
4. பாடலில், நேர்மை என்னும் பொருள் தரும் சொல் _________
நயன்
நன்றி
பயன்
பண்பு
5. அரத்தைப்போல் கூர்மையான அறிவு உடையவரானாலும் மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர், ________ ப் போன்றவர் எனத் திருக்குறள் குறிப்பிடுகிறது.
மரத்தை
விலங்கு
பறவை
6. திருக்குறள் __________ எனப் போற்றப்படுகிறது.
பதினெண்கீழ்க்கணக்கு
பண்புடைமை
அறத்துப்பால்
உலகப்பொதுமறை
7. __________ உடையவர் செய்யும் நல்ல செயல்களாலேயே இவ்வுலகம் இயங்குகிறது.
தீயபண்பு
நற்பண்பு
இவற்றில் இரண்டும் இல்லை
8. திருக்குறளை இயற்றியவர் ___________
திருவள்ளுவர்
கம்பர்
ஔவையார்
கண்ணதாசன்
9. 'மக்கட்பண்பு' இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
மக்கட் + பண்பு
மக்க + பண்பு
மக்கள் + பண்பு
மக் + பண்பு
10. ‘ஆன்ற’ – இச்சொல்லின் பொருள்________
உயர்ந்த
பொலிந்த
அணிந்த
அயர்ந்த
