wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உடம்படுமெய்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

நிலைமொழி ஈற்றில் உள்ள உயிரெழுத்தையும் வருமொழி முதலில் உள்ள உயிரெழுத்தையும் உடம்படுத்துவதற்குத் (இணைப்பதற்கு) தோன்றும் மெய் எழுத்தே உடம்படுமெய்யாகும்.

a)

சரி

b)

பிழை

2.

நிலைமொழி ஈற்றில் இ, ஈ, ஐ முதலிய உயிர் எழுத்துகள் வந்து வருமொழி - முதலில் உயிர் எழுத்து வந்தால் _________ தோன்றும்.

a)

'ய' கர மெய்

b)

'வ' கர மெய்

c)

'ம' கர மெய்

d)

'க' கர மெய்

3.

நிலைமொழி ஈற்றில் அ, ஆ, உ, ஊ, ஓ, ஒள முதலிய உயிர் எழுத்துகள் வந்து வருமொழி - முதலில் உயிர் எழுத்து வந்தால் ‘வ’ கர மெய் தோன்றும்.

a)

‘ய’ கர மெய்

b)

‘வ’ கர மெய்

c)

‘ம’ கர மெய்

d)

‘ப’ கர மெய்

4.

கீழ்க்காணும் சொற்களில் எது யகர உடம்படுமெய் ?

a)

மலையருவி

b)

மெதுவோட்டம்

c)

கோவில்

d)

பலவாண்டு

5.

கீழ்க்காணும் சொற்களில் எது வகர உடம்படுமெய் ?

a)

காலையுணவு

b)

நிலாவொளி

c)

மணியடித்தான்

d)

கூலியாள்

6.

மறை + ஓது =

a)

மறை ஓது

b)

மறைவோது

c)

மறையோது

7.

மா + இலை =

a)

மாவிலை

b)

மாயிலை

c)

மா இல்லை

d)

மாவலை

8.

தே + இலை =

a)

தேவிலை

b)

தேயிலை

c)

தேஇலை

d)

தேனலை

9.

பூ + அரும்பு =

a)

பூவரும்பு

b)

பூயரும்பு

c)

பூனரும்பு

d)

பூனிரும்பு

10.

தே + ஆலயம் =

a)

தேயாலயம்

b)

தேனாலயம்

c)

தேவாலயம்

d)

தேவிலயம்

11.

மது + ஆலை =

a)

மதுயாலை

b)

மதுயலை

c)

மதுவலை

d)

மதுவாலை

12.

தீ+ அணைப்பு =

a)

தீவணைப்பு

b)

தீயணைப்பு

c)

தீயிணைப்பு

13.

கலை + அரங்கம் =

a)

கலைவரங்கம்

b)

கலாவரங்கம்

c)

கலையரங்கம்

14.

கலை + உணர்வு =

a)

கலைவுணர்வு

b)

கலையுணர்வு

c)

கலியுணர்வு

15.

வேலை + ஆள் =

a)

வேலையாள்

b)

வேலைவாள்

c)

வேளையாள்