Worksheetsஇலக்கணம் படிவம் 4 - ஆகுபெயர்
Total questions: 21
Worksheet time: 11mins
கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொல் எவ்வகை ஆகுபெயர் ?
சீரான உணவுப் பழக்கமில்லாத வாழ்க்கை முறையினால் நீரிழிவு நோய் தாக்கப்பட்டு சிறுநீரகம் செயலிழந்தவர்களின் எண்ணிக்கையில் மலேசியா முதலிடம் வகிக்கிறது.
பொருளாகு பெயர்
இடவாகு பெயர்
சினையாகு பெயர்
காலவாகு பெயர்
கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொல் எவ்வகை ஆகுபெயராகும் ?
இளமாறன் வீட்டுக்கு வெள்ளை அடித்தான்.
தொழிலாகு பெயர்
இடவாகு பெயர்
பண்பாகு பெயர்
பொருளாகு பெயர்
கீழ்க்காண்பனவற்றுள் ஆகுப்பெயரைத் தெரிவு செய்க.
I கார் விளைந்தது
II வற்றல் விற்றான்
III இனிப்பு மிட்டாய்
IV உணவு உண்டான்
I , II
II , III
III , IV
I , IV
கீழ்க்காணும் வாக்கியம் எவ்வகை ஆகுப்பெயரைக் கொண்டுள்ளது ?
உலகக் கிண்ண பூப்பந்தாட்ட போட்டியில் மலேசியா சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வென்றது.
தொழிலாகு பெயர்
இடவாகு பெயர்
காலவாகு பெயர்
பொருளாகு பெயர்
தொழிலாகு பெயரை ஏற்று வந்துள்ள வாக்கியத்தித் தெரிவு செய்க.
மருதன் தோட்டத்துக்குச் சென்று கத்தரி நட்டான்.
அருணன் கோவிலில் பெற்ற பொங்கலை உண்டான்.
முகுந்தன் அருகிலுள்ள ஆற்றில் அழுக்கைத் துவைத்தான்.
பினாங்கில் நடைபெற்ற கோர விபத்தைக் கண்டு நாடே அதிர்ந்தது.
கீழ்க்காணும் வாக்கியம் எவ்வகை ஆகுபெயரைக் கொண்டுள்ளது ?
யாதவன் இனிப்பு உண்டான்.
தொழிலாகு பெயர்
பண்பாகு பெயர்
பொருளாகு பெயர்
சினையாகு பெயர்
கீழ்க்காண்பனவற்றுள் ஆகுபெயரைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அந்த மேடை நாடகத்திற்குத் தலைக்குப் பத்து ரிங்கிட் வசூலிக்கப்படும்.
தொழில்துறை முன்னேற்றத்தால் உலக மக்கள் தூய்மைக் கேட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
இனிப்புப் பலகாரங்களை அதிகம் உண்பது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்.
நேற்று நடைபெற்ற காற்பந்து போட்டியில் மலேசிய விளையாட்டாளர்கள் சிறப்பாக விளையாடினர்.
கொடுக்கப்பட்டுள்ள படம் எவ்வகை ஆகுபெயரைக் குறிக்கிறது ?
இடவாகு பெயர்
பண்பாகு பெயர்
பொருளாகு பெயர்
தொழிலாகு பெயர்
கீழ்க்காணும் வாக்கியங்களில் சினையாகு பெயரை ஏற்றுவந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
மாநில பேச்சுப் போட்டியில் எங்கள் பள்ளி பங்கேற்றது.
தமிழ்ப் புத்தாண்டுக்கு அம்மா பொங்கல் வைத்தார்.
வீட்டுக்கு வந்த உறவினர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினோம்.
தோட்டத்தில் நான் நட்ட ரோஜா பூத்துக் குலுங்கியது.
தொழிலாகு பெயரை ஏற்று வந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
தைத்திங்கள் முதல் நாளில் என் அம்மா பொங்கல் வைத்தார்.
முக ஒப்பனையாளர் ஒப்பனை செய்வதற்குத் தலைக்கு ஐம்பது ரிங்கிட் வாங்கினார்.
ஶ்ரீலங்காவில் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை உலகமே வேடிக்கைப் பார்த்தது.
பிறந்த நாளன்று குமுதா தன் வகுப்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கினாள்.
கொடுக்கப்பட்டுள்ள ஆகுபெயர் வாக்கியத்திற்கேற்ற இன்னொரு வாக்கியத்தைத் தெரிவு செய்க.
உலகம் அழுதது
தாமரை மலர்ந்தது
நாடு போற்றியது
கார் அறுத்தான்
கத்தரி நட்டான்
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆகுபெயர் வகைகளில் எது இடவாகு பெயர் ?
உலகம் அழுதது
தாமரை மலர்ந்தது
கத்தரி நட்டாள்
கார்த்திகை மலர்ந்தது
பின்வருவனவற்றுள் சரியான இணையைத் தெரிவு செய்க.
தோட்டத்தில் நட்ட ரோஜா மலர்ந்தது - இடவாகு பெயர்
குமணன் பொரியல் தின்றான் - பண்பாகு பெயர்
நேற்று நடந்த போட்டியில் எங்கள் பள்ளி வென்றது - காலவாகு பெயர்
படம் பார்க்கத் தலைக்கு RM16 செலுத்தினோம் - சினையாகு பெயர்
கீழ்க்காணும் வாக்கியங்களுள் சினையாகு பெயரை ஏற்றுவந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
மாநில ஆசிரியர் தின விழாவில் எங்கள் பள்ளி பங்கேற்றது.
தமிழ்ப் புத்தாண்டுக்கு அம்மா பொங்கல் வைத்தார்.
வீட்டுக்கு வந்த உறவினர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.
தோட்டத்தில் நான் நட்ட ரோஜா பூத்துக் குலுங்கியது.
கோடிடப்பட்ட சொல் எவ்வகை ஆகுபெயரைக் குறிக்கிறது ?
அம்மா : கோமதி, அடுப்பிலுள்ள சாம்பாரை இறக்கி வை.
கோமதி : இதோ வருகின்றேன் அம்மா !
பொருளாகு பெயர்
இடவாகு பெயர்
தொழிலாகு பெயர்
பண்பாகு பெயர்
கீழ்க்காணும் வாக்கியங்களில் சினையாகு பெயரைக் குறிக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
மகான்கள் பிறப்பது அரிது.
இராஜ ராஜன் சிறந்த அரசன்.
என் தாயார் நகைகள் வாங்கினார்.
கோகுலன் வெற்றிலை பயிரிட்டான்.
கீழ்க்காணும் தொடர்களில் தொழிலாகு பெயரைத் தெரிவு செய்க.
தாமரை சிரித்தது
உலகம் அழுதது
கார்த்திகை பூத்தது
பொரியல் தின்றான்
கொடுக்கப்பட்ட அட்டவணையில் சரியான ஆகுபெயர் வரிசையைத் தெரிவு செய்க.
A
B
C
D
கீழ்க்காணும் வாக்கியங்களுள் ஆகுபெயரைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
உலகப்பேரேடு எனும் நூலிலுள்ள கட்டுரைகளை வாசித்திருக்கிறீர்களா ?
உலகக்கிண்ண காற்பந்து போட்டி எப்போது நடைபெறும் ?
உலகின் உயரமான மலையின் உச்சியை அடைந்த மலேசியர்கள் யாவர் ?
உலகமே வியக்கும் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரம் எங்கிருக்கிறது ?
கீழ்க்காணும் கருமையாக்கப்பட்ட சொற்களின் ஆகுபெயர் வகையைத் தெரிவு செய்க.
நேற்று நடைபெற்ற மெர்டேகா கிண்ண இறுதிச் சுற்றுக் கால்பந்துப் போட்டியில் மலேசியா சிங்கப்பூரைத் தோற்கடித்தது.
பொருளாகு பெயர்
இடவாகு பெயர்
சினையாகு பெயர்
பண்பாகு பெயர்
வந்த 'எண்ணிக்கைகளை' வைத்துக் கொண்டு கூட்டம் தொடங்கியது.
கருமையாக்கப்பட்ட சொல் ___________________ ஆகும்.
பொருட்பெயர்
எண்ணுப்பெயர்
ஆகுபெயர்
வினைத்தொகை
