wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

செய்யுளும் மொழியணியும்

Total questions: 28

Worksheet time: 19mins

Name
Class
Date
1.

பொய்யாமொழி புலவர் என்று யாரை அழைப்போம்?

a)

பாரதியார்

b)

திருவள்ளுவர்

2.

கொன்றை வேந்தனை எழுதியவர் யார்?

a)

பாரதிதாசன்

b)

ஔவையார்

3.

புதிய ஆத்திசூடியை எழுதியவர் யார்?

a)

ஔவையார்

b)

பாரதியார்

4.

கண்ணும் கருத்தும் என்பது

a)

இணைமொழி

b)

மரபுத்தொடர்

5.

படத்திற்கேற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

உடலினை உறுதி செய்

b)

ஊண்மிக விரும்பு

c)

ஔடதம் குறை

6.

குமரவேல் காணாமல் போன தன் கடிகாரத்தை _____________ _________________ தேடினான்.

a)

அல்லும் பகலும்

b)

சுற்றும் முற்றும்

c)

அன்றும் இன்றும்

7.

நிறைவு செய்க.


கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

________________________________________________

a)

ஆதி பகவன் முதற்றே உலகு

b)

புண்ணுடையவர் கல்லா தவர்

c)

நற்றாள் தொழாஅர் எனின்

8.

படத்திற்குப் பொருத்தமான இரட்டைக்கிளவி எது?

a)

கலகல

b)

கிலுகிலு

c)

மளமள

9.

படத்திற்குப் பொருத்தமான ஆத்திசூடியைத் தெரிவு செய்க

a)

ஊக்கமது கைவிடேல்

b)

உடையது விளம்பேல்

c)

ஏற்பது இகழ்ச்சி

10.

இவர் இயற்றிய புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க

a)

ஆறுவது சினம்

b)

ஐயமிட்டுண்

c)

இளைத்தல் இகழ்ச்சி

11.
திருக்குறள் மனனப் போட்டியில் வெற்றி பெற ராமு __________.
a)
தோள் கொடுத்தான்
b)
கரைத்துக் குடித்தான்
c)
தாளம் போட்டான்
d)
கங்கணம் கட்டினான்
12.

ஆண்டுதோறும் கவியழகி, பிறந்த நாளன்று அன்பு இல்லங்களுக்குச் சென்று நன்கொடையும் உணவும் வழங்க விரும்புவாள்.

a)

ஆறுவது சினம்

b)

இயல்வது கரவேல்

c)

அறம் செய்ய விரும்பு

d)

ஈவது விலக்கேல்

13.

இராமருடன் வனவாசம் சென்ற சீதை, அரண்மனை சுகபோகங்களை மறந்து வனவாச வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டாள்.

a)

ஒப்புர ஒழுகு

b)

ஊக்கமது கைவிடேல்

c)

ஐயமிட்டு உண்

d)

ஏற்பது இகழ்ச்சி

14.

கணிதப் பாடத்தில் ஆர்வமே இல்லாமல் இருந்த வசந்தியிடம், வாழ்வில் முன்னேற கணிதம் மற்றும் மொழிப்பாடம் ஆகிய இரண்டுமே முக்கியம் என்பதை அவள் ஆசிரியர் விளக்கினார்.

a)

ஓதுவ தொழியேல்

b)

எண்ணெழுத் திகழேல்

c)

ஒப்புர வொழுகு

d)

ஏற்பது இகழ்ச்சி

15.

கொடுக்கப்பட்டுள்ள ஆத்திசூடியின் பொருளைத் தெரிவு செய்க.

( ஏற்பது இகழ்ச்சி)

a)

நம்மிடம் உள்ள செல்வம் அல்லது கல்வியைப் பற்றி பிறரிடம் தற்பெருமையாகப் பேசக்கூடாது

b)

உலக நடைமுறை அறிந்து அதன்படி நடந்து கொள்ள வேண்டும்

c)

உழைப்பின்றி பிறர் கொடுப்பதை ஏற்றுக் கொள்வது இழிவானச் செயலாகும்

d)

பொறாமைக் கொண்டு பிறரைத் தூற்றிப் பேசக் கூடாது

16.

ஒரு காரியத்தில் ஈடுபட்டால் இடையில் எவ்வளவு தடைகள் ஏற்பட்டாலும் அதிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து செய்து முடிக்க வேண்டும். இப்பொருளுக்கு ஏற்ற பழமொழி யாது?

a)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

b)

முன் வைத்த காலைப் பின் வைக்காதே

17.

சிறு சிறு மணிகள் ஒன்றோடொன்று மோதும்போது உண்டாகும் ஒலி.

இவ்விளக்கத்திற்குறிய இரட்டைக்கிளவி யாது ?

a)

மளமள

b)

தகதக

c)

கிலுகிலு

d)

பளார்பளார்

18.

கோயிலுக்குச் செல்வதற்காக அக்காள் வேலைகளை ___________ வெனச் செய்து முடித்தாள்.

a)

தக தக

b)

கிடு கிடு

c)

மள மள

d)

பர பர

19.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.

திருக்குறளில் கோடிடப்பட்டுள்ள உடுக்கை எனும் சொல்லுக்குப் பொருள் என்ன?

a)

ஆடை

b)

உடுக்கை

c)

உரல்

d)

கண்

20.

கூலிம் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பிரிட்டிஷ் புத்தாக்க சாதனை விருது பெற்ற பிறகே உலகமே அறியும் இளம் விஞ்ஞானிகளாகினர்.

a)

இலைமறை காய் போல

b)

எலியும் பூனையும் போல

c)

குன்றின் மேலிட்ட விளக்குப் போல

d)

மலரும் மணமும் ஓல

21.

கொடுக்கப்பட்டுள்ள வெற்றி வேற்கையில் கருமையாக்கப்பட்ட சொல்லுக்கு பொருத்தமான வேறு சொல் எது?

கல்விக்கு அழகு கசடற மொழிதல்.

a)

சரியாக

b)

பிழையாக

c)

பிழையின்றி

22.

8) நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்

எனும் உலகநீதியின் பொருள்............

a)

மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது.

b)

ஒருநாளும் படிக்காமல் இருக்கக்கூடாது.

c)

தாய் தந்தையரை மாதிக்க வேண்டாம்.

d)

நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலைநிறுத்த முயலக்கூடாது.

23.

கீழ்க்காணும் பொருளுக்கேற்ற கொன்றைவேந்தன் தெரிவு செய்ய

மிகச் சிறிய செயலாக இருப்பினும் நன்கு ஆராய்ந்து அறிந்த பிறகே அதனை மேற்கொள்ள வேண்டும்

a)

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

b)

நுண்ணிய கருமம் எண்ணித் துணிக

c)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

d)

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.

24.

கீழ்க்காணும் செய்யுளை நிறைவு செய்க.

----------------------------------------------------------------

நீர்க்குள் பாசிபோல் வேர் கொள்ளாதே

a)

நூறாண்டு பழகினும் கேண்மை

b)

நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை

c)

பழகினும் மூர்க்கர் கேண்மை

d)

ஓராண்டு பழகினோம்

25.

கோடிட்ட இடத்தில் பொருத்தமான விடையைத் தெரிவு செய்க.

வளவன்: இன்று உங்கள் மைத்துனரின் திருமணம் ஆயிற்றே. நீங்கள் செல்லவில்லையா?

குமரன்: அவர் மிகவும் கர்வம் பிடித்தவன். அதனால், எனக்குப் போக விருப்பமில்லை.

வளவன்: அப்படிச் சொல்லாதீர்கள் குமரன். -------------- நாம் அனைவரிடமும் அன்பாக இருந்தால் தான் நமக்குப் பல உறவினர்களும் நண்பர்களும் இருப்பார்கள்.

a)

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

b)

சூதும் வாதும் வேதனை செய்யும்

c)

ஏவா மக்கள் மூவா மருந்து.

d)

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை

26.

கீழ்க்காணும் உவமைத்தொடருக்கு எதிர்மறையான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.


மலரும் மணமும் போல்

a)

சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல

b)

எலியும் பூனையும் போல்

c)

பசுத்தோல் போர்த்திய புலி போல

d)

சிலை மேல் எழுத்து போல

27.

கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற செய்யுளைத் தெரிவு செய்க,


சேர சோழ பாண்டியனின் ஆட்சியில் அதிருப்தி அடைந்த பசு சோழ மன்னரிடம் முறையிடச் சென்றது.பசுவின் மனக் குமுறலை உணர்ந்த பாண்டிய மன்னன் தன் மகனைத் தேர்க் காலில் இட்டுக் கொன்றான்.

a)

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

b)

அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்

c)

செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்

d)

மன்னர்க் கழகு செங்கோன் முறைமை

28.

ரவி கோபத்தால் பற்களை __________ வெனக் கடித்தான்

a)

சல சல

b)

கடு கடு

c)

சிடு சிடு

d)

நற நற