wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வடிவமைப்பும் தொழில்நுட்பமும் (புதிர்க் கேள்வி) ஆண்டு 5

Total questions: 15

Worksheet time: 24mins

Name
Class
Date
1.

கொடுக்கப்பட்டுள்ள தையல் வகைகளில் எது அடிப்படைத் தையல் வகை அல்ல?

a)

தடிமனான தையல்

b)

மெலிதான தையல்

c)

வெளிப்புறத் தையல்

2.

கருவிகளின் பயன்பாடுகளில் சரியானதைத் தேர்ந்தெடுத்திடுக.

a)

அளவு நாடா - காகிதங்களை வெட்டுவதற்கு

b)

அளவுகோல் - துணிகளைக் கத்தரிப்பதற்கு

c)

ஊசி - துணிகளைத் தைப்பதற்கு

3.

இவற்றுள் எது கம்பளித் திறன்பேசி உறை தயாரிக்கப் பயன்படாதப் பொருள்?

a)

கத்தரிக்கோல்

b)

குண்டூசி

c)

அளவு நாடா

d)

வெண்கட்டி

4.

1. இவற்றுள் எது புதுபிக்க இயலும் வளங்கள் அல்ல?

a)

காற்று

b)

ஆறு

c)

சூரிய ஒளி

5.

1. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது புதுபிக்க இயலும் சக்தியின் நன்மை?

a)

சூரிய ஒளி இல்லாதபோதும் தயாரிக்கலாம்.

b)

கட்டுமான பணிகளுக்கான உபகரணங்கள் முதலீடு குறைவு.

c)

வற்றாத தன்மையுடன் இயற்கையாகவே அதிக அளவு கிடைக்கின்றது.

6.

இவற்றுள் எது மின்னியல் துணைப் பாகங்களும் அதன் செயற்பாங்கும் அல்ல?

a)

மின் உருமாற்றி - மின்சக்தியைச் சுழலும் சக்தியாக மாற்ற உதவும்.

b)

சூரிய மின்கலன் - சூரிய ஒளியை மின்சக்தியாக மாற்றும்.

c)

மின்கம்பி - மின்சாரத்தைக் கடத்திச் செல்லும்

7.

1. தெரிவு கட்டுப்பாட்டு அமைப்பின் தன்மைகள் யாவை?

I. நடவடிக்கைகள் படிப்படியாக இருக்கும்

II. மீண்டும் தொடங்கக்கூடிய நடவடிக்கையாக இருக்கும்

III. இத்தெரிவு வழி தவறு இருப்பின் மறுமுறை திருத்திக்கொள்ள வாய்ப்பு இல்லை.

a)

I,II

b)

II,III

c)

I,III

8.

இவற்றுள் எது வரிசைக் கட்டுப்பாட்டு அமைப்பு அல்ல?

a)

எளிமையான முறையாகும்

b)

கட்டளையின்படி நடவடிக்கையை ஒன்றன் பின் ஒன்றாக மேற்கொள்ளுதல்

c)

நடவடிக்கைகளைத் தொடக்கம் முதல் இறுதிவரை செயல்படுத்த வேண்டாம்

9.

இவற்றுள் நகர்ப்புற விவசாயத்தில் நீர்த் தேக்க நடவு இடங்கள் அல்ல?

a)

நிலம் குறைவாக இருக்கும் வீடுகளில்

b)

பள்ளித் திடலில்

c)

அடுக்குமாடி வீடுகளில்

10.

எளிதாக எப்பொருளைக்கொண்டு நீர்த் தேக்க நடவுமுறையினை மேற்கொள்ளலாம்?

a)

கண்ணாடிப் புட்டி

b)

நெகிழி புட்டி

c)

காகிக பெட்டி

11.

நிரலாக்கப் பலகை மைக்ரோ:பிட் நிரல் தொகுதி வடிவில் ஆனது.

a)

சரி

b)

தவறு

12.

நீர்த்தேக்க நடவுமுறைக்கு பொருந்தாத பாத்திரத்தைத் தெரிவு செய்க.

a)

வட்டையம்

b)

தேங்காய் மட்டை

c)

மரப்பெட்டி

d)

ஜாடி

13.

நகர்ப்புற விவசாயத்தில் நீர்த்தேக்க நடவு முறையில் பயிரிட முடியாத தாவரத்தைத் தெரிவு செய்க.

a)

கைலான்

b)

மிளகாய்

c)

தண்டுக்கீரை

d)

சோளம்

14.

மெய்நிகர் மைக்ரோ:பிட் இல்லாமல் நிரலைப் பரிசோதிக்கலாம்.

a)

சரி

b)

தவறு

15.

செயல் தவிர்ப்பு (undo) வின் சரியான தன்மையைத் தெரிவு செய்க.

a)

நிரலைப் பரிசோதித்தல்.

b)

நிரலைத் திருத்துவதற்கு

c)

நிரலை உருவாக்க