wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒலி வேறுபாடு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

என் மாமா விமானியாகப் ____ புரிகிறார். அதனால் அவர் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்வார்.

a)

பணி

b)

பனி

2.

பாலு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தான். அதில் விவசாயம் பற்றிய செய்தி _____.

a)

ஒளிபரப்பானது

b)

ஒலிபரப்பானது

3.

நாயைக் கண்ட மாலா வேகமாக மரத்தில் ஏறினாள். நாய் அந்த இடத்தைவிட்டுச் சென்றதும் மரத்திலிருந்து கீழே _______.

a)

இரங்கினாள்

b)

இறங்கினாள்

4.

என் அப்பா தோட்டத்தில் ஒரு ______ தோண்டினார். அதில் ஒரு செடியை நட்டார்.

a)

குளி

b)

குழி

5.

வெளியூருக்குச் சென்றிருந்த திரு ரவியின் வீட்டில் திருடர்கள் புகுந்தனர். அவர்கள் வீட்டிலிருந்த நகைகளையும் பணத்தையும் ______ அடித்துச் சென்றனர்.

a)

கொல்லை

b)

கொள்ளை

6.

ராணி ரோஜாவைப் பறித்தாள். அப்போது அதன் முட்கள் அவளுடைய விரலை ________ காயமாக்கியது.

a)

கீரி

b)

கீறி

7.

மணி தன் வீட்டுத் தோட்டத்திற்குச் சென்றான். அங்கு மலர்ந்திருந்த மல்லிகை ______ வீசியது.

a)

மனம்

b)

மணம்

8.

நேற்று கல்வி அமைச்சர் பள்ளிக்கு வந்தார். அவர் கல்வியின் அவசியம் பற்றி ஓர் _____ ஆற்றினார்.

a)

உரை

b)

உறை

9.

சரவணன் தன் அம்மாவிற்கு ஒரு பேனாவைப் பரிசாக வாங்கினான். அதில் அவரது பெயரை _______ கொடுத்தான்.

a)

பொரித்து

b)

பொறித்து

10.

தேவி தன் வீட்டின் கூரையைப் பார்த்தாள். அங்கு ஒரு _____ கூடு கட்டியிருந்தது.

a)

குளவி

b)

குழவி