NEW
Font size
Worksheetsஆகுபெயர்
Total questions: 10
Worksheet time: 5mins
ஆகுபெயர் என்றால் என்ன?
ஒரு பொருளின் பெயரைக் குறிப்பது.
ஒரு பொருளின் பெயரைக் குறிக்காது அதன் தன்மையைக் குறிப்பது.
பெயர்ச்சொல்லின் தன்மையை விளக்குவது.
ஒரு பொருளின் பெயரைக் குறிக்காது அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளுக்கு ஆகிவருவது.
ஆகுபெயர் எத்தனை வகைப்படும்.
4
6
7
8
கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொல் எவ்வகை ஆகுபெயர் ?
சீரான உணவுப் பழக்கமில்லாத வாழ்க்கை முறையினால் நீரிழிவு நோய் தாக்கப்பட்டு சிறுநீரகம் செயலிழந்தவர்களின் எண்ணிக்கையில் மலேசியா முதலிடம் வகிக்கிறது.
பொருளாகு பெயர்
இடவாகு பெயர்
சினையாகு பெயர்
காலவாகு பெயர்
கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொல் எவ்வகை ஆகுபெயராகும் ?
இளமாறன் வீட்டுக்கு வெள்ளை அடித்தான்.
தொழிலாகு பெயர்
இடவாகு பெயர்
பண்பாகு பெயர்
பொருளாகு பெயர்
கீழ்க்காணும் கருமையாக்கப்பட்ட சொற்களின் ஆகுபெயர் வகையைத் தெரிவு செய்க.
நேற்று நடைபெற்ற மெர்டேகா கிண்ண இறுதிச் சுற்றுக் கால்பந்துப் போட்டியில் மலேசியா சிங்கப்பூரைத் தோற்கடித்தது.
பொருளாகு பெயர்
இடவாகு பெயர்
சினையாகு பெயர்
பண்பாகு பெயர்
கீழ்க்காணும் வாக்கியங்களுள் ஆகுபெயரைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
உலகப்பேரேடு எனும் நூலிலுள்ள கட்டுரைகளை வாசித்திருக்கிறீர்களா ?
உலகக்கிண்ண காற்பந்து போட்டி எப்போது நடைபெறும் ?
உலகின் உயரமான மலையின் உச்சியை அடைந்த மலேசியர்கள் யாவர் ?
உலகமே வியக்கும் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரம் எங்கிருக்கிறது ?
கீழ்க்காணும் வாக்கியங்களில் சினையாகு பெயரைக் குறிக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
மகான்கள் பிறப்பது அரிது.
இராஜ ராஜன் சிறந்த அரசன்.
என் தாயார் நகைகள் வாங்கினார்.
கோகுலன் வெற்றிலை பயிரிட்டான்.
பின்வருவனவற்றுள் சரியான இணையைத் தெரிவு செய்க.
தோட்டத்தில் நட்ட ரோஜா மலர்ந்தது - இடவாகு பெயர்
குமணன் பொரியல் தின்றான் - பண்பாகு பெயர்
நேற்று நடந்த போட்டியில் எங்கள் பள்ளி வென்றது - காலவாகு பெயர்
படம் பார்க்கத் தலைக்கு RM16 செலுத்தினோம் - சினையாகு பெயர்
படம் குறிக்கும் ஆகுபெயர் எது?
காலவாகு பெயர்
இடவாகு பெயர்
தொழிலாகு பெயர்
பண்பாகு பெயர்
கார்த்திகை மலர்ந்தது
இடவாகு பெயர்
காலவாகு பெயர்
பண்பாகு பெயர்
தொழிலாகு பெயர்
