Font size
Worksheets10th maths chapter 2
Total questions: 15
Worksheet time: 8mins
1. யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தின் படி, a மற்றும் b என்ற மிகை முழுக்களுக்கு,
தனித்த மிகை முழுக்கள் q மற்றும் r,a = b +q r என்றவாறு அமையுமானால், இங்கு r ஆனது,
0 < r ≤ b
1 < r < b
0 < r < b
0 ≤ r < b
0 < r ≤ b
2. யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தைப் பயன்படுத்தி, எந்த மிகை முழுவின் கனத்தையும்9ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதிகள்
0,1,8
1,4,8
0,1,3
1,3,5
3. 65 மற்றும் 117-யின் மீ.பொ.வ-வை 65m-117 என்ற வடிவில் எழுதும்போது, m-யின் மதிப்பு
4
2
1
3
4. 1729-ஐ பகாக் காரணிப்படுத்தும் போது, அந்தப் பகா எண்களின் அடுக்குகளின் கூடுதல்
1
2
3
4
5. 1 முதல் 10 வரையுள்ள (இரண்டு எண்களும் உட்பட) அனைத்து எண்களாலும் வகுபடும்
மிகச்சிறிய எண்
2025
5220
5025
2520
6. 7⁴ᵏ≡ (மட்டு 100)
1
2
3
4
7. F₁ = 1 , F₂ = 3 மற்றும் Fₙ = Fₙ₋₁+Fₙ₋₂
எனக் கொடுக்கப்படின் F₅ ஆனது
3
5
8
11
8. ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4 எனில்,
பின்வரும் எண்களில் எது இந்தக் கூட்டுத் தொடர்வரிசையில் அமையும்?
4551
10091
7881
13531
9. ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் 6வது உறுப்பின் 6 மடங்கும் 7 வது உறுப்பின் 7 மடங்கும் சமம்
எனில், அக்கூட்டுத் தொடர்வரிசையின் 13-வது உறுப்பு
0
6
7
13
10. ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் 31 உறுப்புகள் உள்ளன. அதன் 16-வது உறுப்பு m எனில்,அந்தக் கூட்டுத் தொடர்வரிசையில் உள்ள எல்லா உறுப்புகளின் கூடுதல்.
16m
62m
31m
31/2m
11. ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம்
4. இந்தக் கூட்டுத்தொடர்வரிசையின் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் அதன் கூடுதல் 120 கிடைக்கும்?
6
7
8
9
12. A = 2⁶⁵மற்றும்B = 2⁶⁴+2⁶³+2⁶²+......+2⁰
எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
பின்வருவனவற்றில் எது உண்மை?
B ஆனது A ஐ விட 2⁶⁴அதிகம்
A மற்றும்B சமம்
B ஆனது A-ஐ விட 1 அதிகம்
A ஆனது B–ஐ விட 1 அதிகம
13. 3/16 ,1/8, 1/12 ,1/18,.....
என்ற தொடர்வரிசையின் அடுத்த உறுப்பு
1/24
1/27
2/3
1/81
14. t₁,t₂,t₃,...என்பது ஒரு கூட்டுத் தொடர்வரிசை எனில், t₆, t₁₂,t₁₈,.....என்பது
ஒரு பெருக்குத் தொடர்வரிசை
ஒரு கூட்டுத் தொடர்வரிசை
ஒரு கூட்டுத் தொடர்வரிசையுமல்ல, பெருக்குத் தொடர்வரிசையுமல்ல
ஒரு மாறிலித் தொடர் வரிசை
15. ( 1³+2³+3³+........+15³) - (1+2+3+.......15)
யின் மதிப்பு
14400
14200
14280
14520
