Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உயர்நிலை 2 விரைவு - மரபுத்தொடர்கள், இணைமொழிகள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

குமணன் உருவத்தில் தன் தாத்தாவை அப்படியே __________________ போன்று இருப்பதாக அனைவரும் கூறுவர்.

a)

உரித்துவைத்தது

b)

ஒற்றைக் காலில் நிற்பது

2.

ராமுவின்மீது பொறாமைகொண்ட மணி அவனைப் பற்றி __________________ பேசியதை யாரும் நம்பவில்லை.

a)

ஒத்தூதாமல்

b)

கதை கட்டாமல்

3.

கயல் தான் கலந்துகொள்ளவிருக்கும் போட்டியில் பங்கேற்கும் விளையாட்டாளர்களின் திறமையை __________________ அவர்களின் விவரங்களைத் தன் தோழியிடம் கேட்டறிந்தாள்.

a)

ஆழம்பார்க்க

b)

ஒருகை பார்க்க

4.

வேலையிடத்தில் மேலாளர்கள் கூறும் அனைத்திற்கும் ஊழியர்கள் __________________ எது சரி எது தவறு என்பதைச் சுட்டிக்காட்டுவது மிகவும் அவசியம்.

a)

ஒத்தூதாமல்

b)

இட்டுக் கட்டி

5.

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் தன்னை எதிர்த்துப் போட்டியிடும் மாலாவை  __________________ போவதாகக் கமலி சவால் விட்டாள்.

a)

ஒருகை பார்க்க

b)

ஆழம் பார்க்க

6.

மணிமேகலை தனக்குக் கீழ் பணிபுரியும் சக ஊழியர்களிடம் குறித்த நேரத்திற்குள் பணியை முடித்துவிட வேண்டும் என்று __________________ கூறினாள்.

a)

அழுத்தம் திருத்தமாக

b)

ஏட்டிக்குப் போட்டியாக

7.

தங்கள்மீது தன்னம்பிக்கை இல்லாதவர்களே மற்றவர்களைப் பற்றி __________________ கூறுவர்.

a)

இன்பமும் துன்பமும்

b)

இல்லாததையும் பொல்லாததையும்

8.

மனித வாழ்க்கையில் __________________ மாறிமாறி வரும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

a)

இன்பமும் துன்பமும்

b)

தானமும் தர்மமும்

9.

வாழ்வில் முன்னேற வேண்டும் என்னும் நோக்கத்தோடு அகமது __________________ உழைத்துவருகிறார்.

a)

சிட்டாய்ப் பறந்து

b)

ஊண் உறக்கமின்றி

10.

திருடனிடமிருந்து உண்மையை __________________ காவலர்கள் கடுமையாகப் போராடினர்.

a)

கக்க வைக்க

b)

கதை கட்ட