wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

payirchigal

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

வளர்ந்து வரும் நாடுகளிடையே, நம் நாட்டின் ஒற்றைக் கோபுரமும் இரட்டை கோபுரமும் மலேசியர்களின் திறமையை ___________ மிளிரச் செய்துள்ளன.


a)

இலைமறைக் காய் போல

b)

வேலியே பயிரை மேய்ந்தது போல

c)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

d)

சூரியனைக் கண்ட பனி போல

2.

கீழேயுள்ள படங்களில் ஒரு பொருள் சேதமடைவதைத் தடுக்க முடியாமை என்பதை விளக்கும் உவமைத்தொடருக்குத் தொடர்புடைய படம் எது?

a)

b)

c)

d)

3.

____________ இருந்த மாலதியும் ரேவதியும் சிறு பிரச்சனையால் இன்று ______________ ஆகிவிட்டனர்.


a)


நகமும் சதையும் போல

b)

எலியும் பூனையும் போல

c)

நகமும் சதையும் போல

d)

மலரும் மணமும் போல

4.

ரகு ; மணி உனக்கு ஒன்று தெரியுமா? நேற்று நள்ளிரவு நமது குடியிருப்புப் பகுதியில் திருடன் ஒருவன் நுழைந்து விட்டான்.

மணி ; ஆம் தெரியுமே!

ரகு ; அப்படியா! இந்தச் செய்தி எப்படி இவ்வளவு விரைவாகப் பரவியது?


a)


குன்றின் மேலிட்ட விளக்கு போல

b)

பசுத்தோல் போர்த்திய புலி போல

c)

இலைமறைக் காய் போல

d)

காட்டுத் தீ போல

5.

இலைமறைக் காய் போல என்ற உவமைத்தொடருக்கு எதிரான பொருள் தரும் உவமைத்தொடர் யாது?

a)

பசுத்தோல் போர்த்திய புலி போல

b)

யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல

c)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

d)

அனலில் இட்ட மெழுகு போல

6.

ஏழ்மை குடும்பத்தில் பிறந்தாலும் வறுமை ஒரு தடையல்ல என்பதை நிருபீத்து விட்டாயே!

மேற்கண்ட கூற்றுக்கு ஏற்ற உவமைத்தொடர் என்ன?

a)


சூரியனைக் கண்ட பனி போல

b)

சேற்றில் மலர்ந்த செந்தாமைரைப் போல

c)

சிலை மேல் எழுத்துப் போல

d)


காட்டுத் தீ போல

7.

'நீ அந்தப் பணத்தை ஏமாற்றி எடுத்ததும் இல்லாமல் அதை இவ்வளவு நேரம விசாரித்தும் ஒப்புக்கொள்ளாமல் பல பொய்களைச் சொல்லி தப்பித்து ஓடப் பார்க்கிறாயா?'

சூழலுக்குப் பொருந்தாத மரபுத்தொடர் எது?

a)


கங்கணம் கட்டுதல்

b)

கடுக்காய் கொடுத்தல்

c)

காது குத்துதல்

d)

கம்பி நீட்டுதல்

8.

படத்தில் மறைந்திருக்கும் மரபுத்தொடரின் பொருள் என்ன?

a)


உறுதி பூணல்

b)

பிறவாத ஒன்று

c)

முழுக் கவனத்துடன்

d)

விடாப்பிடியாக நிற்றல்

9.

கணித் மேதையான ராமானுஜன் அவர்கள் கணிதத் தொடர்பான எல்லா நுணுக்கங்களையும் _________________.

a)


கங்கணம் கட்டியுள்ளார்

b)

மனப்பால் குடித்துள்ளார்

c)

தட்டிக் கழித்துள்ளார்

d)

கரைத்துக் குடித்துள்ளார்

10.

யாரிடமும் சொல்லாதே என்று எவ்வளவோ சொல்லியும் நீ அந்த விஷயத்தைச் சொல்லி விட்டாயே. இப்பொழுது என்ன செய்வது?

சூழலுக்கு ஏற்ற மரபுத்தொடர் என்ன?

a)


குரங்குப் பிடி

b)

ஓட்டை வாய்

c)

கிணற்றுத் தவளை

d)

ஏட்டுச் சுரைக்காய்

11.

தந்தை வீட்டில் இல்லாத தருணத்தில் அவருடைய பணத்தைத் திருடினான் அகிலன். அவன் அன்னையிடம் __________________ அகப்பட்டான்.


a)


திட்ட வட்டமாக

b)

கையும் களவுமாய்

c)

கடுக்காய் கொடுத்து

d)

அரக்கப் பரக்க