wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விகாரப் புணர்ச்சி கெடுதல் (ஆண்டு5 கடினம் மகரம் கெடுதல்)

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.


மகரம் கெடும் விகாரப் புணர்ச்சியைப் பற்றிய சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக.

(இரண்டு விடைகள் உள்ளன)

a)

மகர கெடுதல் விகாரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் மறையக்கூடும்

b)

நிலைமொழி முதல் எழுத்து இடையினமாக இருக்குமாயின் மகரம் கெடும்

c)

மகர கெடுதல் விகாரத்தில் ஒரேழுத்து மட்டுமே மறையக்கூடும்

d)

வருமொழி முதல் எழுத்து இடையினமாக இருக்குமாயின் மகரம் கெடும்

2.

சேர்த்திடுக.

வாணம் + வேடிக்கை:

a)

வாணவேடிக்கை

b)

வன வேடிக்கை

c)

வானட்வேடிக்கை

d)

வானற்வேடிக்கை

3.

கீழ்க்காணும் சொற்களில் மகரம் கெட்டுள்ள சொல் எது?

a)

பம்பரம்

b)

பவளவாய்

c)

நிலக்கரி

d)

தினந்தோறும்

4.

நாம் தற்போதைய பொருளாதர நிலையில் ________ செய்வது சரியல்ல; சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

a)

பண+விரயம்

b)

பணம்+விரயம்

c)

பன+விரயம்

5.

கடந்த இரண்டு மாதங்களாக மழையின்றி வெப்ப காலமாக உள்ளதால்_________ஏற்பட்டுள்ளது.

a)

நீல+வறட்சி

b)

நில+வறட்சி

c)

நிலம்+வறட்சி

6.

'ம' கரம் கெடாத சரியான விடையைத் தேர்ந்தெடுக.

போதுமான ______________ இல்லாததால் திரு கதிரவன் பகுதி நேர வேலையைச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

a)

மத+வருமானம்

b)

மாத+வருமானம்

c)

மாதம்+வருமானம்

d)

மத+வருமானம்

7.

கீழ்க்காணும் விடைகளில் எச்சொல்லில் மகரம் கெட்டுள்ளது.

a)

குளத்து நீர்

b)

இலக்கணவிதி

c)

தினந்தந்தி

d)

வரந்தா

8.

பிரித்துக்காட்டுக

நீலவண்ணம்

a)

நீலம்+வண்ணம்

b)

நீ+வண்ணம்

c)

நீல+வண்ணம்

9.

சரியான இணையைத் தேர்ந்தெடுக.

a)

மரம்+வேர்=மரம் வேர்

b)

அறம்+வழி= அறவழி

c)

காரம்+வடை=கார்வடை

10.

'ம' கரம் கெடாத சரியான விடையைத் தேர்ந்தெடுக.

நெடுந்தூர ஓட்டப் போட்டி எளிதல்ல._______ மிக்கவர்களினாலே இப்போட்டியில் கலந்துகொள்ள முடியும்.

a)

மன்ன+வலிமை

b)

மன+வலிமை

c)

மனம்+வலிமை

d)

மான+வலிமை

11.

சேர்த்துக்காட்டுக.

தங்கம்+விலை

a)

தாங்க விலை

b)

தங்விலை

c)

தங்கம் விலை

d)

தங்க விலை

12.

'ம' கரம் கெடாத சரியான விடையைத் தேர்ந்தெடுக.

அப்பா தம் தோட்டத்தில் உள்ள சில _______ எடுத்துப் பதப்படுத்தி வைத்துள்ளார். ஏனெனில், செடி வளர்க்கத் திட்டமிட்டுள்ளார்.

a)

பழ+விதை

b)

பழம்+விதை

c)

பாழ+விதை

13.

மகரம் கெட்ட சரியான விடையைத் தேர்ந்தெடுக.

திருமணத்தில் இசைத்த __________ அனைவரையும் கவர்ந்தது.

a)

மேளவாசிப்பு

b)

மேளம் வாசிப்பு

c)

மேல் வாசிப்பு

14.

மகரம் கெட்டுள்ள சொல்லைத் தேர்ந்தெடுக.

(இரண்டு விடைகள் உள்ளன)

a)

முகவாட்டம்

b)

கரங்கொடு

c)

பணவரவு

d)

வரங்கொடு

15.

மகரம் கெடாத விடையைக் கண்டறிக.

அந்த மாலை நேரத்தில் குளிர்ச்சியான காற்று வீசும் போது _________தோன்றியதைப் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

a)

வானம்+வில்

b)

வான+வில்

c)

வன+வில்