NEW
Font size
Worksheetsசெய்வினை செயப்பாட்டுவினை பயிற்சி - ஆண்டு 5
Total questions: 10
Worksheet time: 5mins
செய்வினை வாக்கியங்களைச் செயப்பாட்டுவினை வாக்கியங்களாக மாற்றி எழுதுக.
1. பூவரசி தோட்டத்தில் மலர்ந்திருந்த பூக்களைப் பறித்தாள்.
A. பூவரசி தோட்டத்தில் மலர்ந்திருந்த பூக்களால் பறிக்கப்பட்டது.
B. தோட்டத்தில் மலர்ந்திருந்த பூக்கள் பூவரசியால் பறிக்கப்பட்டன.
C. தோட்டத்தில் மலர்ந்திருந்த பூக்கள் பறிக்கப்பட்டது பூவரசியால்.
2. பல பாடல்களைத் கவிஞர் வைரமுத்து தமிழ் திரையுலகில் எழுதியுள்ளார்.
A. பல பாடல்கள் தமிழ் திரையுலகில் கவிஞர் வைரமுத்துவால் எழுதப்பட்டன.
B. பல பாடல்களை எழுதியுள்ளார் கவிஞர் வைரமுத்து தமிழ் திரையுலகில்.
C. கவிஞர் வைரமுத்து பல பாடல்களை எழுதியுள்ளார் தமிழ் திரையுலகில்.
3. தேனமுது சிற்றுண்டிச்சாலையில் அறுசுவை உணவருந்தினாள்.
A. அறுசுவை உணவு தேனமுதுவால் சிற்றுண்டிச்சாலையில் அருந்தப்பட்டது.
B. அறுசுவை உணவு அருந்தப்பட்தால் தேனமுது சிற்றுண்டிச்சாலையில்.
C. சிற்றுண்டிச்சாலையில் அறுசுவை உணவருந்தப்பட்டது தேனமுதுவால்.
4. தமிழர்கள் மலேசியாவின் சுதந்திரத்திற்கு முன்னர் தோட்டப்புறங்களில் இரப்பர்
மரங்களைச் சீவினர்.
A. மலேசியாவின் சுதந்திரத்திற்கு முன்னர் தோட்டப்புறங்களில் இரப்பர்
மரங்கள் தமிழர்களால் சீவப்பட்டன.
B. மலேசியாவின் முன்னர் தோட்டப்புறங்களில் இரப்பர் மரங்களைச் சீவப்பட்டது.
C. சுதந்திரத்திற்கு முன்னர் தோட்டப்புறங்களில் இரப்பர் சீவினர் மலேசியாவின் மரங்களை.
5. குயவன் அழகிய கைவினைப் பொருட்களையும் மட்பாண்டங்களையும் செய்தான்.
A. கைவினைப் பொருட்களையும் அழகிய மட்பாண்டங்களும் குயவன் செய்தான்.
B. அழகிய கைவினைப் பொருட்களும் மட்பாண்டங்களும் குயவனால் செய்யப்பட்டது.
C. அழகிய கைவினைப் பொருட்களையும் மட்பாண்டங்களும் செய்யப்பட்டது குயவனால்.
செயப்பாட்டுவினை வாக்கியங்களைச் செய்வினை வாக்கியங்களாக மாற்றி எழுதுக.
6. மதுரை கண்ணகியால் எரிக்கப்பட்டது.
A. மதுரை கண்ணகியால் எரித்தாள்.
B. மதுரை எரிந்தது கண்ணகியால்.
C. கண்ணகி மதுரையை எரித்தாள்.
7. விவசாய நிலத்தில் உழவனால் விவசாயம் செய்யப்பட்டது.
A. விவசாய நிலத்தில் உழவனால் விவசாயம் செய்யப்பட்டது.
B. விவசாயம் விவசாய நிலத்தில் உழவன் செய்யப்பட்டது.
C. உழவன் விவசாய நிலத்தில் விவசாயம் செய்தான்.
8. அபிராமி அந்தாதி அபிராமி பட்டரால் இயற்றப்பட்டது.
A. அபிராமி பட்டர் அபிராமி அந்தாதியை இயற்றினார்.
B. அந்தாதி அபிராமி பட்டர் இயற்றினார் அபிராமியால்.
C. அபிராமி அந்தாதி இயற்றியது அபிராமி பட்டர்.
9. நடனப் போட்டியின் பரிசுகள் தலைமையாசிரியரால் கொடுக்கப்பட்டது.
A. தலைமையாசிரியர் கொடுத்தார் நடனப் போட்டியின் பரிசுகளை.
B. தலைமையாசிரியர் நடனப் போட்டியின் பரிசுகளைக் கொடுத்தார்.
C. நடனப் போட்டியின் பரிசுகளை கொடுத்தார் தலைமையாசிரியர்.
10. தொல்காப்பியம் தொல்காப்பியரால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது.
A. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தொல்காப்பியம் எழுதுயது தொல்காப்பியர்.
B. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதினார் தொல்காப்பியர் தொல்காப்பியத்தை.
C. தொல்காப்பியர் தொல்காப்பியத்தைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதினார்.
