NEW
Font size
Worksheetsஇலக்கிய இலக்கண மேதை ஆண்டு 5
Total questions: 25
Worksheet time: 38mins
பொருளுக்கு ஏற்ற வெற்றி வேற்கையைத் தெரிவு செய்க.
அரசருக்குரிய சிறப்பு, நீதியோடு ஆட்சி நடத்துதல் ஆகும்.
செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்.
எழுத்தறிவித்தவன் இறைவனாகும்.
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே.
மன்னர்க் கழகு செங்கோன் முறைமை.
அண்மையில் பத்தாங்காலியில் ஏற்பட்ட மண்சரிவால் பல கூடாரங்கள் _____________ இடிந்து புதையுண்டன.
மட மட
சர சர
பளீர் பளீர்
கட கட
சரியான மரபுத்தொடரை தெரிவு செய்க.
" என்ன மாலினி இப்படி ____________ யாக வந்திருக்கிறாய் ? பார்ப்பவர்கள் கேலி செய்ய மாட்டார்களா?"
பேரும் புகழும்
அரை குறை
கல்வி கேள்வி
ஒளிவு மறைவு
பழமொழிக்கேற்ற சூழல்களைத் தெரிவு செய்க.
சாலை விபத்தில் தன் பெற்றோரை இழந்த நிவேதா _____________________ மனம் கலங்கினாள்.
கண்ணினைக் காக்கும் இமை போல
அனலில் இட்ட மெழுகு போல
குன்றின் மேலிட்ட விளக்குப் போல
கிணற்று தவளை போல
கோடிட்ட இடத்திற்கேற்ப சரியான மரபுத்தொடர்களைத் தெரிவு செய்க.
பல்வேறு அறிவியல் கண்டுப்பிடிப்புகளைக் கண்டு பிடித்துச் சாதனைப் படைத்த துர்க்கா சிறந்த இளம் விஞ்ஞானி என_____________________ விட்டாள்.
பெயர் பொறித்து
காது குத்துதல்
திட்ட வட்டமாக
தட்டிக் க்ழித்து
வாக்கியத்தில் காணப்படும் காலியான இடத்தில் சரியான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
ஜேக்லின் ஒலியைவிடத் துரிதமாக விமானத்தைச் செலுத்தி உலகச் சாதனை புரிந்த பிறகு அவர் புகழ் ________________________ உலகெங்கும் பரவியது.
குன்றின் மேலிட்ட விளக்குப் போல
கிணற்றுத் தவளை போல
அனலில் இட்ட மெழுகு போல
நகமும் சதையும் போல
சூழலுக்கு ஏற்ற உலகநீதியைத் தேர்ந்தெடுக.
அடிக்கடி கோபம் கொள்ளும் அருந்ததியின் வீட்டு வழியாகச் செல்ல வேண்டாம் என்று அம்மா கூறினார்.
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்
சினந்தேடி யல்லையுந் தேட வேண்டாம்
சினந்திருந்தார் வாசல்வழிச் சேறல் வேண்டாம்
சரியான மொழியணியுடன் நிறைவு செய்யவும்.
மனம் உண்டானால்__________________.
அணை போடு.
புல்லும் ஆயுதம்.
மார்க்கம் உண்டு.
சேற்றிலே ஒரு கால்
கீழ்க்காணும் விளக்கத்திற்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
ஏதாவது காரணம் கூறித் தவிர்த்தல்.
தட்டிக் கழித்தல்
பெயர் பொறித்தல்
திட்ட வட்டம்
கிள்ளுக் கீரை
கீழ்க்காணும் திருக்குறளில் விடுபட்ட சொல்லைத் தெரிவு செய்க.
காலத்தி னாற்செய்த _____________ சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் ______________.
உதவி , பெரிது
நன்றி , பெரிது
நன்றி , சிறியது
நன்று , பெரிது
மாவீரன் ஒருவன் சாட்டையால் குதிரையை _____________ என்று அடித்தான்.
கட கட
பளீர் பளீர்
மட மட
சர சர
சரியான இணைமொழியைத் தெரிவு செய்க
நற்குடிமகனாகத் திகழ நாம் -__________ சிறந்து விளங்க வேண்டும்.
ஒளிவு மறைவு
கல்வி கேள்வி
அரை குறை
பேரும் புகழும்
கீழ்க்கண்ட செய்யுளில் விடுபட்ட சொற்களைத் தெரிவு செய்க
அடக்க முடையா _______________ றெண்ணிக்
கடக்கக் ___________ வேண்டா – மடைத்தலையில்
ஓடுமீ னோட உறுமீன் ____________
வாடி யிருக்குமாங் கொக்கு
ரறிவிலரென், கருதவும், வருமளவும்
ரறிவிலரென், வருமளவும்,
கருதவும்
வருமளவும், ரறிவிலரென், கருதவும்
கருதவும், வருமளவும,ரறிவிலரென்
கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற இடைச்சொல்லைத் தெரிவு செய்க.
· குமரன் ஒரு காற்பந்து வீரன். _____________ கல்வியில் சிறப்பாக தேர்ச்சிப் பெற்றான்.
எனவே
மேலும்
ஆனாலும்
அதற்காக
சரியாக வலிமிகுந்துள்ள தோன்றல் விகாரச் சொல்லைத் தெரிவு செய்க.
அகட்டடம்
இத்பொட்டு
இத்திட்டம்
அக்சோலை
நேர்க்கூற்று வாக்கியத்தை அயற்கூற்று வாக்கியமாக மாற்றுக
“நேற்று என் அக்காள் கோழி வறுவல் சமைத்தார்,” என்று கவி தீபனிடம் கூறினான்.
நேற்று நம் அக்காள் கோழி வறுவல் சமைத்ததாக கவி தீபனிடம் கூறினான்.
நேற்று தன் அக்காள் கோழி வறுவல் சமைத்தார் என கவி தீபனிடம் கூறினான்.
முன்னாள் தன் அக்காள் கோழி வறுவல் சமைத்தார் என்று கவி தீபனிடம் கூறினான்.
முன்னாள் தன் அக்காள் கோழி வறுவல் சமைத்ததாக கவி தீபனிடம் கூறினான்.
சரியாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.
அன்றுச் சென்றான்
இப்படிச் செய்
அவைப் படகுகள்
அங்கேப் பார்
மகர மெய்யீறு இடையினத்தோடு புணரும் தொடரைத் தெரிவு செய்க.
இ + படகு = இப்படகு
வாணம் + வேடிக்கை = வாணவேடிக்கை
மண் + குடம் = மட்குடம்
பொன் + பாதாம் = பொற்பாதம்
பொன் + சரம்=
பொற்ச்சரம்
பொற்சரம்
பொன்ச்சரம்
பொன்சரம்
வாக்கியத்தில் கருமையாக்கப்பட்ட சொல்லைப் பிரித்து எழுதுக.
பக்தர்கள் தைப்பூசத்தன்று தங்கள் நேர்த்திக்கடனைப் பாற்குடம் ஏந்தி நிறைவேற்றினர்.
பால் + குடம்
பாற் + குடம்
பாலை + குடம்
பால் + குட
கீழ்க்காணும் செய்வினை வாக்கியத்திற்கு ஏற்ற செயப்பாட்டு வினை வாக்கியமாக மாற்றுக.
அம்மா மல்லிகைப்பூ மாலை தொடுத்தார்.
மல்லிகைப்பூ மாலை அம்மாவால் தொடுக்கப்பட்டது.
மல்லிகைப்பூ அம்மா தொடுத்தார்.
மாலை மல்லிகை அம்மாவால் தொடுக்கப்பட்டது
அம்மா மாலை மல்லிகை தொடுத்தார்.
சரியான புணர்ச்சியை உணர்த்தும் விடையைத் தெரிவு செய்க.
கள்+குடம் = கற்குடம்
சொல்+போர் = சொற்போர்
நாள்+காட்டி = நாள்காட்டி
மண்+குடம்= மற்குடம்
சரியான காலங்களைக் குறிக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
நேன்று கவிதா பள்ளிக்குச் செல்வாள்.
மாலையில் சிறுவர்கள் காற்பந்து விளையாடுவர்.
நாளை சிவா கதைப் புத்தகம் படித்தான்.
அக்காள் நேன்று துணிகளை மடிக்கிறாள்.
காலியான இடத்தை சரியான சொல்லுடன் நிரப்புக.
கலைமணி தான் எழுதிய ______________ கட்டுரைகளையும் ஆசிரியரின் பார்வைக்கு வைத்தாள்.
அத்தனை
இத்தனை
எத்தனை
இத்துணை
அமலன் கவிதைகள் இயற்றினான். ____________, சிறந்த கவிதைகள் இயற்றவும் முயற்சிக்கிறான்.
என்றாலும்
அதற்காக
அல்லது
மேலும்
