wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 6 ( ஆக்கம் : திருமதி செ.ஜெயந்தி)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஜீவா, முகாம் நடவடிக்கையின் போது அறிமுகமான நண்பர்களின் முழுப்பெயர்களை ஞாபகப்படுத்த எண்ணினான் . தன் மூளையின் வரம்பைக் கடக்க அவன் என்ன செய்யலாம்?

a)

கணிப்பியைப் (kalkulator) பயன்படுத்துதல்

b)

கைதொலைப்பேசியைப் பயன்படுத்துதல்

c)

பல முறை நண்பர்களின் பெயரைக் கூறுதல்

d)

அவர்களின் பெயரை நினைவில் கொள்ள புனைப்பெயர்களைப் பயன்படுத்துதல்

2.

சத்யா ஒரு மரத்தடியின் கீழ் இருந்தான். அவன் மரத்தின் மேல் இருக்கும் பல விதமான பறவைகளைக் காண விரும்பினான்.எந்தக் கருவி அந்தப் பறவைகளைக் காண பொருத்தமானதாகும்? *

a)

இணைப்பார்வை தொலைநோக்காடி

b)

துடிப்பறிக்கருவி

c)

நுண்பெருக்கி

d)

உருப்பெருக்காடி

3.

திருமதி மீனா, அணிச்சல் செய்ய விரும்பினார். அவர் பத்து முட்டைகளும் மலரும் வரை வேகமாகவும் எளிதாகவும் அடிக்க விரும்பினர். தன் உடல் உறுப்பின் வரம்பைக் கடக்க அவர் என்ன செய்யலாம்?

a)

தண்ணீர் கொள்கலன்களைப் பயன்படுத்தி உப்பும் வரை முட்டைகளைக் குலுக்குதல்

b)

முட்டையை அடிக்க கரண்டி மற்றும் முட்கரண்டி பயன்படுத்துதல்

c)

மின்சார முட்டையடிக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்துதல்

d)

பற்சக்கரம் கொண்ட முட்டையடிக்கும் கருவியைப் பயன்படுத்துதல்

4.

லிடியா தன் வீட்டின் பின்னால் உள்ள குளத்தில் இருக்கும் மாதிரி நீரை எடுத்தாள். அவள் அந்த மாதிரி நீரிலுள்ள நுண்ணிய உயிரினத்தைக் காண விரும்பினாள்.எந்தக் கருவி அந்த நுண்ணிய உயிரினத்தை மிகத் தெளிவாகக் காண பொருத்தமானதாகும்? *

a)

துடிப்பறிக்கருவி

b)

இணைப்பார்வை தொலைநோக்காடி

c)

நுண்பெருக்கி

d)

உருப்பெருக்காடி

5.

சிறுவன் ரேணுசரன் உயரமான மரக்கிளையில் உள்ள ரம்புத்தான் பழங்களைப் பறித்து உண்ண விரும்பினான். அவன் அப்பழங்களை எப்படி சுலபமாக பறிக்கலாம்?

a)

கொக்கிப் பொருத்தப்பட்ட நீண்ட கம்பைக் கொண்டு ரம்புத்தான் பழங்களை எடுத்தல்

b)

அப்பழத்தை எடுக்க மரம் ஏறுதல்

c)

கவணையைக் கொண்டு அப்பழத்தை விழ செய்தல்

d)

அப்பழத்தின் மீது கற்களை எறிதல்

6.

திருமதி. ஷாமினி வெவ்வேறு இடத்தில் இருக்கும் சில நிர்வாக உறுப்பினருடன் சந்திப்பு ஒன்று நடத்த நினைத்தார். அவர் நேரத்தையும் பயணக் கட்டணத்தையும் சேமிக்க நினைத்தார்.திருமதி ஷமினி எந்தப் பொருளைப் பயன்படுத்தலாம்? *

a)

கணினி

b)

கைத்தொலைப்பேசி

c)

தொலைக்காட்சி

d)

மகிழுந்து

7.

நேரம் என்றால் என்ன?

a)

இரண்டு வேளைக்கு இடையே உள்ள கால அளவு

b)

ஒரு பொருளின் மேற்பரப்பின் அளவு

c)

ஒரு பொருளின் உள்ளே இருக்கும் உட்பொருளின் எண்ணிக்கை

d)

இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள தூரம்

8.

திரு. மாதவன் தன் மகிழுந்தின் டயரில் காற்று குறைந்திருப்பதைப் பார்த்தார். அந்த

டயரில் சேதமடைந்தப் பகுதியைச் சரி செய்ய எண்ணினார். டயரின் எப்பகுதியில்

சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை எவ்வாறு அறிவான்?

a)

டய.ரைச் சுற்றிலும் எண்ணெய் பூசுதல்.

b)

டயரில் தொடர்ந்து வேகமாகக் காற்றடித்தல்.

c)

டயரிலிருந்து வெளியேறும் ஒலியைக் கேட்டல்.

d)

டயரை முழுமையாக நீரில் மூழ்கச் செய்தல்

9.

பின் வருவனவற்றுள் எது அளவைகளைக் கொண்டு அளத்தலின் முக்கியத்துவம்

அல்ல?

a)

அக்கால அளவிடும் கருவிகளை மாற்றியமைக்க.

b)

நேரத்தை மிச்சப்படுத்த

c)

மனிதர்கள் சுலபமாகக் கணக்கிட

d)

சரியான மற்றும் துள்ளிதமான அளவை அறிய

10.

30 நிமிடங்களுக்குப் பிறகு கொதித்த நீர் குளிர்ச்சி அடைவதை மாலா உற்றறிந்தாள். நீர் நீண்ட நேரம் வெப்பம் குறையாமலிருக்க என செய்ய வேண்டும்?

a)

நீரை மண் பாண்டத்தில் மூடி வைக்க வேண்டும்

b)

உலோக பாத்திரத்தில் மூடி வைக்க வேண்டும்

c)

காற்று புகாத பாத்திரத்தில் மூடி வைக்க

வேண்டும்

d)

நீரை மூடி வைக்க வேண்டும்