wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி ஆண்டு 6 இலக்கணம்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் சொற்களைச் சரியாக 'மை' ஈற்றுப் பண்புப்பெயர் புணர்ச்சியில் பிரிதெழுதுக.

செங்கோல்

a)

A. செ + கோல்

b)

B. செம் + கோல்

c)

C. செங் + கோல்

d)

D. செம்மை + கோல்

2.

சரியாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.

a)

A. அறிந்துக் கொண்டான்

b)

B. கேட்டுக் கொண்டான்

c)

C. சென்றுப் பார்த்தான்

d)

D.செய்துப் பார்த்தான்

3.

கீழ்காணும் வாக்கியங்களுள் வினையடையை ஏற்றுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

A. பாடலாசிரியர் நா.முத்துகுமார் அருமையான

பாடல் வரிகளை இயற்றியுள்ளார்.

b)

B. ஆசிரியர் பிழையான வாக்கியத்தைத் திருத்தி

எழுதினார்

c)

C. முத்தமிழ் விழாவில் கவியமுதன் கவிதையைத்

துணிச்சலாகப் படைத்தான்.

d)

D. ஆசிரியர் பொறுப்பான கடமை மாணவர்களைத்

தேர்வுச் செய்தார்.

4.

கீழ்க்காணும் சொற்கள் எந்த வகையைச் சார்ந்தது?

  • சூரியோதயம்
  • சகோதரன்
  • ஞானோதயம்
a)

A. இயல்பு புணர்ச்சி

b)

B. திசைப் புணர்ச்சி

c)

C. தோன்றல் புணர்ச்சி

d)

D. வடமொழிச் சந்தி

5.

கீழ்க்காணும் சொற்களுள் திசைப்புணர்ச்சியைக் காட்டும் சொல் யாது?

a)

A. தென்னாடு

b)

B. இந்நாடு

c)

C. தன்னாடு

d)

D. பொன்னாடு

6.

சரியான வடமொழிச் சந்தி இலக்கணத்தைத் தெரிவு செய்க.

a)

A. குண + அதிசயம் = குணமதிசயம்

b)

B. தேவ + இந்திரன் = தேவேந்திரன்

c)

C. ஞான + உதயம் = ஞானமுதயம்

d)

D. ராஜ + இந்திரன் = ராஜந்திரன்

7.

வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களுக்குப் பின் வலிமிகும் என்ற கூற்றுக்கு ஏற்ற சொல்லை தெரிவு செய்க.

a)

A. செம்புற்றுப் பழம்

b)

B. செய்யச் சொல்

c)

C. பாடப் புத்தகம்

d)

D. தேடிப் பிடித்து

8.

கீழ்க்காண்பனவற்றுள் எது வினையெச்ச வாக்கியம் அல்ல?

a)

A. ரமா மாலையைக் கட்டி முடித்தாள்.

b)

B. நடனப் பெண்மணிகள் ஆடிப் பாடினார்கள்.

c)

C. அவர்கள் உணவை உண்டு களித்தார்கள்

d)

D. குமணன் பாடப் புத்தகம் படித்தான்.

9.

சரியான வினையெச்சத்தைத் தெரிவு செய்க.

a)

A. பாடிய பறவை

b)

B. ஆடிப் பாடினான்

c)

C. வரைந்த ஓவியம்

d)

D. நட்ட செடி

10.

பின்வருவனவற்றுள் எது பெயரடை வாக்கியமாகும்.

a)

A. அழகான குழந்தை சிரித்தாள்.

b)

B. ஆண் குழந்தை மழலை மொழி பேசியது.

c)

C. அவர்களின் குழந்தை மழலை மொழி பேசியது.

d)

D. சுகன்யாவின் குழந்தை மழலை மொழி பேசியது.

11.

கொடுக்கப்பட்ட சொற்களைப் பிரித்தெழுதுக.

தென்கிழக்கு

a)

A. தென் + கீழ்

b)

B. தென் + கிழக்கு

c)

C. தெற்கு + கிழக்கு

d)

D. தெற்கும் + கிழக்கும்

12.

கொடுக்கப்பட்ட சொல்லைச் சேர்த்தெழுதுக.

ஒன்பது + பத்து

a)

A. பத்தொன்பது

b)

B. ஒன்பது பத்து

c)

C. தொண்ணூறு

d)

D. தொள்ளாயிரம்

13.

கொடுக்கப்பட்ட சொல்லின் அடை யாது?

அழகான பெண்

a)

A. பெயரடை

b)

B. வினையடை

c)

C. வினைபெயரடை

d)

D. பெயர்வினையடை

14.

வடமொழி தொடர்களில் நிலைமொழி ஈற்றில் அ/ஆ இருந்து வருமொழி அ/ஆ தொடங்கினால் ________________ தோன்றும்

a)

A. அ

b)

B. ஏ

c)

C. ஆ

d)

D. ஓ

15.

பிரித்து எழுதிக.

தேவாரம்

a)

A. தேவா + ரம்

b)

B. தே + ஆரம்

c)

C. தே + வாரம்