wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

BAHASA TAMIL PT3 (2)

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

மதிமலர் ஆசிரியர் கற்றுக் கொடுத்த கவிதையை மனனம் செய்து ___________________வென ஒப்புவித்தாள்.

a)

விறுவிறு

b)

கடகட

c)

பரபர

d)

கிடுகிடு

2.

கனிமொழி தன் வீட்டுவேலைகளை முடித்து விட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் தன் தாயைக் காண ______________ வென ஓடினாள்.

a)

A திமுதிமு

b)

B கடகட

c)

C துருதுரு

d)

D விறுவிறு

3.

தாமதமாக எழுந்த அழகுநம்பி ___________ வெனக் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு பள்ளிக்குச் சென்றான்.

a)

பரபர

b)

நசநச

c)

கிடுகிடு

d)

துருதுரு

4.

நமது பிரதமர் துன் மகாதீர் முகம்மது அவர்கள், நல்ல உணவுப் பழக்கத்தைக் கொண்டிருப்பதால் 94 வயதைக் கடந்தும் ________________________ யின்றி ஆரோக்கியமாக வாழ்கின்றார்.

a)

ஈடிணை

b)

அடக்க ஒடுக்கம்

c)

சீறும் சிறப்பும்

d)

நோய் நொடி

5.

பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டாரைக்

கண்டு யாழினி ____________ நின்றாள்.

a)

வாடி வதங்கி

b)

சீறும் சிறப்பும்

c)

ஆடிப்பாடி

d)

நாணிக் கோணி

6.

அந்தத் தோட்டத் தொழிலாளி எப்பொழுதும்

தன் முதலாளியிடம் _____________________ ஆக

இருப்பதால், முதலாளியின் நன்மதிப்பைப் பெற்றார்.

a)

ஈடிணை

b)

சீறும் சிறப்பும்

c)

உயர்வு தாழ்வு

d)

அடக்க ஒடுக்கம்

7.

பல ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த

செந்தாமரையும் தேனருவியும் _______________

அகமகிழ்ந்து ஒருவரையொருவர் அணைத்துக்

கொண்டனர்.

a)

தாயைக் கண்ட சேயைப் போல

b)

அழகுக்கு அழகு செய்வது போல

c)

பழம் நழுவி பாலில் விழுந்தாற் போல

d)

கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல.

8.

இயல்பாகவே வசீகரத் தோற்றமுடைய தமயந்தி, தங்க நகைகள் அணிந்திருந்தது __________________ இருந்தது.

a)

மலரும் மணமும் போல

b)

இலைமறை காய் போல

c)

உள்ளங்கை நெல்லிக்கனி போல

d)

அழகுக்கு அழகு செய்வது போல

9.

தன் செயலில் குறியாயிருத்தல்


கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கு ஏற்ற உவமைத் தொடரைத் தெரிவு செய்க

a)

இலைமறை காய் போல

b)

இலவு காத்த கிளி போல

c)

உள்ளங்கை நெல்லிக்கனி போல

d)

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

10.

குமுதனின் பண்பை விளக்கும் மரபுத் தொடரைத் தெரிவு செய்க

a)

உடும்புப் பிடி

b)

பாட்டு வாங்குதல்

c)

வெட்டிப் பேச்சு

d)

ஏட்டிக்குப் போட்டி

11.

கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற மரபுத்தொடரைத்

தெரிவு செய்க.


தினமும் காலையில் நடைத்தடத்தில் நடக்கச்

செல்லும் வேலனின் பாட்டி தன் தோழிகளுடன்

பேசி மகிழ்வார்.

a)

அளவளாவுதல்

b)

வெட்டிப் பேச்சு

c)

இடித்துரைத்தல்

d)

தோள் கொடுத்தல்

12.

புத்தரின் வாழ்க்கை தத்துவங்களுக்கு _______________ அவரது சீடர்கள் அதன்படி நடந்து கொண்டனர்.

a)

இடித்துரைத்து

b)

தலை வணங்கிய

c)

ஏட்டிக்குப் போட்டியாக

d)

பாட்டு வாங்கியதால்