wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நமது சமயத்தை அறிவோம் -பாக்யா 17

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

இவர் இந்து மதம் சார்ந்த பெற்றோருக்கு பிறந்ததாகவும், பிறகு ஒரு முஸ்லிம் குடும்பத்தில் வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

a)

சீரடி சாய் பாபா

b)

பாபாஜி

c)

ஶ்ரீ ராகவேந்திரர்

d)

விவேகானந்தர்

2.

அவருக்குப் பதினாறு வயது இருக்கும் பொழுது, ஒரு வேப்பமரத்தடியில் முதல் முதலாக தியானத்தில் ஈடுபட்டிருந்தபொழுது, ஒரு மகானாக காட்சியளித்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவரை நாடிவந்த மக்களுக்கு சிறந்த ஆன்மீகத் தத்துவங்களை எடுத்துக்கூற தொடங்கினார். அவரை தரிசிக்க அதிகளவில் மக்கள் வர ஆரம்பித்தனர். மேலும், தன்னிடம் ‘உடல் நிலை சரியில்லை’ என்று வருபவர்களுக்கு ஆசி வழங்கி அவர்களுடைய நோயைக் குணப்படுத்தினார். அவர்....

a)

இறையருள் பெற்றவர்

b)

தியானத்தால் ஞானம் பெற்றவர்

c)

தொண்டாற்ற பிறந்தவர்

d)

மனிதன் உருவத்தில் தெய்வம்

3.

இருபதாம் நூற்றாண்டில் இந்தியா முழுவதும் பரவலாக அறியப்பட்ட ‘முதல் அவதாரப் புருஷர்’ எனப் போற்றப்பட்ட சீரடி சாய் பாபா அவர்கள், 1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் இந்த உலக வாழ்க்கையை விட்டு நீங்கினார்.

a)

ஒவ்வொரு ஆரம்பத்திற்கும் முடிவு உண்டு.

b)

மனித பிறப்பிற்கு இறப்பும் உண்டு

c)

வாழ்தல் என்பது பெரிய சாதனை

d)

அவதார புருஷர் இறைவனுக்கு ஒப்பாவார்.

4.

இறைவனை நாம் வணங்குவதோடு.....

a)

எதிர்ப்பார்ப்பையும் கொள்ள வேண்டும்

b)

அதிக ஆசைகளையும் வளர்க்க வேண்டும்

c)

ஏழை எளியவர்களுக்கு உதவ வேண்டும்

d)

தீய சிந்தனைகளை அலட்சியம் செய்யக்கூடாது

5.

................................................. (1595-1671), 16ஆம் நூற்றான்டில் வாழ்ந்த இந்து மத மகான் ஆவார். இவர் வைணவ நெறியையும் துவைத மதத்தையும் போதித்தவர் ஆவார். இவர் விஷ்ணு பக்தரான பிரஹலாதரின் அவதாரமவார்.

a)

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்

b)

ஶ்ரீ ரமனமகிரிஷி

c)

ஶ்ரீ விவேகானந்தர்

d)

ஶ்ரீ ஷிர்டிபாபா

6.

ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள மந்திராலயம் என்ற இடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் இவர் உயிருடன் சமாதி நிலையை அடைந்தார்.

a)

ஒளிவடிவாய்

b)

இறைவனாய்

c)

ஜீவ சமாதியாய்

d)

குருவாய்

7.

வேங்கடநாதர் திரு திம்மண்ண பட்டர் மற்றும் திருமதி கோபிகாம்பாள் என்ற தம்பதிகளுக்கு பெருமாள் வேங்கடாசலபதியின் அருளால் மூன்றாவதாக ஒரு பிள்ளை தமிழ் நாட்டில் சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் பிறந்தது. அவர்கள் அந்த குழந்தைக்கு ............................ என்று பெயரிட்டனர்.

a)

நாதன்

b)

வேங்கடபிரபு

c)

வேங்கடபுத்திரன்

d)

வேங்கடநாதன்

8.

அவரது தந்தையின் மறைவிற்கு பிறகு தன் அண்ணன் திரு குருராய பட்டரிடம் வளர்ந்தார். அவரது அடிப்படைக் கல்வியை மதுரையில் பயின்றார்.

a)

கல்வியே முக்கியம்

b)

செல்வமே முக்கியம்

c)

சுய அறிவு போதும்

9.

வீணை வாசிப்பதில் சிறந்தவராகவும் திகழ்ந்தார். துவைத வேதாந்தத்தையும் இலக்கியத்தையும் பயின்றார்.அவர் குழந்தைகளுக்கு சமஸ்கிருதமும் வேதமும் கற்பித்தார்.

a)

பாடங்களை மட்டும் கற்பது நன்மை தரும்.

b)

பாடங்களை மட்டும் கற்காமல் பல கலைகளையும் அறிவது நன்மை தரும்.

c)

நாம் நமக்காக மட்டும் கல்வி கற்க வேண்டும்.

10.

அவர் தன் மாணவர்களிடம் எந்த தட்சணையும் எதிர்பார்க்காததால் வறுமையில் வாழ்ந்தார். இதனால் அவரும் அவர் குடும்பமும் வாரத்தில் பல நாட்கள் பட்டினியாக இருந்தனர். இவ்வாறு வறுமையில் வாடியும் அவர் கடவுள் மேல் நம்பிக்கையுடன் இருந்தார்.

a)

எண்ணம் போல் வாழ்வு

b)

முயற்சி திருவினையாக்கும்

c)

நம்பினோர் கெடுவதில்லை

11.

வேங்கடநாதரின் குருவான ஸ்ரீ ஸுதீந்திர தீர்த்தார் தனக்கடுத்து மத்வ மடத்திற்கு பீடாதிபதியாக ஒரு நல்ல வாரிசை தேடிக்கொண்டிருந்தார். அப்பொழுது அவர் தான் பகவான் வேங்கடநாதரே ஸுதீந்திரர்க்கு பின் மடத்தின் பீடாதிபதியாக ஏற்றவர் என்று கூறியதாக கனவு கண்டார். காரணம்... அவர்

a)

இறைத்தன்மை நிறைந்தவர்

b)

குழந்தைகளிடம் அன்பாக இருப்பதால்

c)

பொறுப்புள்ளவர்

12.

மாணவர்களுக்கு சாஸ்திரங்களை போதித்தல் மற்றும் உள்ளூர் அறிஞர்களை ஊக்குவித்தல் போன்ற காரியங்களில் ஈடுபட்டார். அவர் சென்ற இடமெல்லாம் தன் பக்தர்களின் குறைகளையும் உடல் ஊனங்களையும் குணமடையச் செய்து அருளினார்.

a)

ஒரு முழு குருவாக இருந்தார்.

b)

ஒரு மருத்துவராக இருந்தார்

c)

ஆசானாக இருந்தார்

13.

குருவின் ஆசி பெற...

a)

மனிதத் தன்மையுடன் வாழவேண்டும்

b)

நிறைய பயில வேண்டும்

c)

தர்மம் செய்ய வேண்டும்

14.

நாம் பல குருக்களை அறிந்துக் கொண்டால் ...

a)

புதிய விஷயங்களை அறியலாம்

b)

வாழ்வின் நோக்கம் புரியும்

c)

இறைத்தன்மை பெறலாம்

d)

லட்சியம் அடையலாம்