Font size
Worksheetsநமது சமயத்தை அறிவோம்-பாக்யா 21
Total questions: 10
Worksheet time: 5mins
அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். திண்ணன் என்ற இயற்பெயர் கொண்ட இவர், வேடுவ குலத்தில் பிறந்தவர். வேட்டை ஆடுவதால் சிறந்தவர்,
திருமூலர்
கண்ணப்ப நாயனார்
விவேகானந்தர்
ஔவையார்
இவர் வாயில் நீர்சுமந்து வந்து அபிசேகம் செய்தும், தலையில் சொருகி வந்த மலர், இலைகளால் அர்சனை செய்தும், பக்குவப்பட்ட பன்றி இறைச்சியை படைத்தும் வந்தார்.
அன்பின் வெளிப்பாடு
அலட்சியத்தன்மை
பக்தி முறை
ஆகமவிதிப்படி குடுமித்தேவரை வணங்கும் சிவ கோசரியார் எனும் பிராமணர் மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டார். கண்ணப்பரின் அன்பினை சிவகோசரியாருக்கு உணர்த்த திண்ணார் வரும் வேளையில் சிவலிங்கத்தி்ன் வலக்கண்ணில் குருதி வருமாறு செய்தார் சிவபெருமான். அதைக் வருவதைக் கண்ட திண்ணனார், பச்சிலை இட்டு மருத்துவம் பார்த்தார். அதன்பொழுதும் அடங்காத குருதியினை நிறுத்த, தன் கண்களில் ஒன்றினை அம்பினால் அகழ்ந்து இலிங்கத்தின் கண்ணிருக்கும் இடத்தில் இட்டார். இக்கூற்றிற்கு ஏற்ற குறள்...
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்....
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு....
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப...
"கண்ணப்ப நிற்க என் வலத்தினில் என்றும் நிற்க"என்று அமுத வாக்கு அருளினார். இதனை கூறியவர் ..................
ஒரு பிராமணர்
சிவ பெருமான்
தேவர்கள்
சிவபெருமான் பெருமையை 100 சுலோகங்களில் பறை சாற்றும் சிவானந்தலஹரி என்ற தன்னுடைய (வடமொழி) நூலில்,.......................... 61 வது சுலோகத்தில் கடவுட்பற்று என்பதற்கு உயர்ந்த இலக்கணம் சொல்கிறார். அவ்விலக்கணத்திற்குச் சிகரம் வைத்தாற்போல் 63 வது சுலோகத்தில் கண்ணப்பரின் உள்நிறைந்த அன்பின் மூன்று செய்கைகளையும் குறிப்பிட்டுவிட்டு இதுவன்றோ பக்தி , கடவுளன்பர் என்பதற்கு இவ்வேடுவனே இலக்கணம் என்கிறார்.
திருமூலர்
ஆதி சங்கரர்
மாணிக்கவாசகர்
கண்ணப்பனுக்கு ஈடான அன்பு என்னிடம் இல்லாவிட்டாலும் கூட இறைவர் என்னையும் ஆட்கொண்டருளியதாகத் திருகோத்தும்பியில் குறிப்பிடுகின்றார்.
மாணிக்கவாசகர்
ஆதி சங்கரர்
திருமூலர்
பக்தன் தன் மிதியடியையே தேவனின் கண்ணில் வைக்கும்போது, அங்கு தேவன் வேறு தான் வேறு என்ற பாகுபாடெல்லாம் பறந்து போய்விட்டது.................................என்ற உபநிஷத்து மகாவாக்கியப்படி, அந்தப் பரம்பொருளே இந்த ஜீவன் என்ற இலக்கணம் ருசுவாகிறது!
எங்கும் கடவுள்
நானே கடவுள்
'தத் த்வம் அஸி' (அதுவே நீ)
கண்ணப்ப நாயனார் கதையில் ..........
சரியான நோக்கத்தில் இறைவனை வணங்க வேண்டும்
கடவுளை கள்ளங்கபடின்றி வணங்க வேண்டும்
நேரம் அறிந்து கடவுளை வணங்க வேண்டும்.
கண்ணப்ப நாயனாரின் நற்பண்புகள் ......
அன்பு
நேர்மை
தைரியம்
முயற்சி
`அஹம் பிரம்மாஸ்மி` என்ற மகாவாக்கியம் அனுபவ வாக்கியம் என்றும் அத்வைத வேதாந்திகள் கூறுகின்றனர்.பொருள் ....
`நான் பரம்பொருளாக இருக்கிறேன்` என்று பொருள் (பிரகதாரண்யக உபநிடதம் (1.4.10)
நானே இவ்வுலகம்
நானே அனைத்தும்
