wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Luke 7-12 Tamil

Total questions: 20

Worksheet time: 19mins

Name
Class
Date
1.

அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் அழைத்து ........... ...........

கொடுத்து அனுப்பினார்.

a)

வழிக்குத் தடியையும் பையையும்

b)

அப்பத்தையும் காசையும்

c)

வல்லமையும் அதிகாரமும்

d)

மேலிருக்கும் எதுவும் அல்ல

2.

எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்த பின்பு மீதியான .................... பன்னிரண்டு கூடைநிறைய எடுக்கப்பட்டது.

a)

துணிக்கைகள்

b)

அப்பங்கள்

c)

மீன்கள்

d)

அப்பங்களும் மீன்களும்

3.

என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் ...

a)

அதை இழந்துபோவான்.

b)

அவனுக்கு லாபம் என்ன?

c)

என்னைப் பின்பற்றக்கடவன்.

d)

அதை இரட்சித்துக்கொள்ளுவான்.

4.

இயேசு சீஷர்கள் சிலரைக் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார். அந்த மலையில் எத்தனைப்பேர்கள் அவரோடே கூடயிருந்தார்கள்.

a)

3

b)

5

c)

2

d)

1

5.

சீஷர்களால் துரத்த கூடாமற்போன பிசாசு, இளைஞனைக் கீழே தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்த ஆவியை .........., அவனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் ஒப்புக்கொடுத்தார்.

a)

அதட்டி

b)

பேசி

c)

வாக்குவாதம் செய்து

d)

ஜெபம்பண்ணுகையில்

6.

வேலையாள் தன் ........... பாத்திரனாயிருக்கிறான்.

a)

எஜமானனுக்கு

b)

வீட்டுக்குச் சொந்தக்காரர்களுக்கு

c)

கூலிக்கு

d)

பிணியாளிகளுக்கு

7.

இயேசு செய்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், எப்படி மனந்திரும்பியிருப்பார்கள்?

a)

பிணியாளிகளைச் சொஸ்தமாக்கி:

b)

இரட்டுடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து

c)

ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல

d)

வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லி

8.

இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், .........................

.................. ............................. மேற்கொள்ளவும் உங்களுக்கு ........................; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.

a)

ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக / சந்தோஷப்படுங்கள்

b)

சத்துருவினுடைய சில வல்லமையையும் / அதிகாரங்கொடுக்கிறேன்

c)

வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே / தாழ்த்தப்படுவாய்

d)

சத்துருவினுடைய சகல வல்லமையையும் / அதிகாரங்கொடுக்கிறேன்

9.

நியாயசாஸ்திரி நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று ஏன் கேட்டான்?

a)

ஜனங்கள் புரிந்துகொள்ள.

b)

தன்னை நீதிமான் என்று காண்பிக்க .

c)

அவரைச் சோதிக்கும்படி.

d)

அவன் கேட்டு புரிந்துகொள்ள.

10.

எனக்குப் பிறன் யார்?

a)

தேவையில் இருப்பவர்கள்.

b)

பக்கத்து வீட்டில் இருப்பவர்கள்.

c)

சமாரியன்.

d)

கள்ளர் கையில் அகப்பட்ட மனுஷன்.

11.

மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள். அது என்ன?

a)

பற்பல வேலைகளைச் செய்வது.

b)

இயேசுவவை நம் வீட்டிலே ஏற்றுக்கொள்வது.

c)

இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருப்பது.

d)

அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குவது.

12.

சிநேகிதனாயிருக்கிறதினிமித்தம் பாதிராத்திரியிலே வருந்திக் கேட்கிறதினிமித்தமாவது எழுந்திருந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பதை இயேசு எதற்கு ஒப்பிடுகிறார்?

a)

சிநேகிதன் கடனாகத் தரவேண்டும்

b)

சிநேகிதனின் அன்பு.

c)

பாதிராத்திரியிலே தொந்தரவு செய்யக்கூடாது.

d)

வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது.

13.

. இயேசு .................. .............. பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே. (Complete)

a)

தேவனுடைய சிந்தனையாலே

b)

தேவனுடைய விரலினாலே

c)

தேவனுடைய சித்தத்தினாலே

d)

தேவனுடைய போதனையாலே

14.

இயேசுவைச் சுமந்த கர்ப்பத்தைவிட பாக்கியமுள்ளவைகளென எதை/யார் சொன்னார்.

a)

தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே

b)

அடையாளத்தைத் தேடாதவர்கள்.

c)

பிசாசுகளைத் துரத்துகிறவர்கள்.

d)

இந்தச் சந்ததியார்.

15.

உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு. எதைக்குரித்து அவர் இப்படிப் பேசினார்?

a)

சரீரம்

b)

விளக்கு

c)

கண்

d)

கை

16.

நீங்களும் உட்பிரவேசிக்கிறதில்லை, உட்பிரவேசிக்கிறவர்களையும் தடைபண்ணுகிறீர்கள் என்று

யாரை குறித்துப்பேசுகிறார்.

a)

தீர்க்கதரிசிகள்.

b)

நியாயசாஸ்திரிகள்.

c)

அப்போஸ்தலர்கள்.

d)

வேதபாரகர்கள்

17.

எச்சரிக்கையாயிருங்கள் - எதைக்குறித்து?

a)

மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்து.

b)

இருளிலே பேசினது. காதிலே சொன்னது.

c)

பொருளாசையைக்குறித்து

d)

மேலிருக்கும் எல்லாம்.

18.

மன்னிக்கப்படுவதில்லை - எது?

a)

மனுஷர் முன்பாக இயேசுவை மறுதலிக்கிறவன்.

b)

மனுஷகுமாரனுக்கு விரோதமான விசேஷத்தைச் சொன்னால்

c)

பரிசுத்த ஆவிக்கு விரோதமாய்த் தூஷணஞ்சொல்லுகிறவன்.

d)

மேலிருக்கும் எதுவும் அல்ல

19.

தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். இவைகளெல்லாம் - எது?

a)

ஆகாரமும், உடையும்.

b)

பறவைகள் காட்டுப்புஷ்பங்கள்.

c)

ஜீவனும், சரீரமும்.

d)

அற்பவிசுவாசிகள்.

20.

பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் ............... உங்களுக்குச் சம்பாதித்து வையுங்கள்.

a)

வங்கியில்

b)

பண்டசாலையில்

c)

பரலோகத்தில்

d)

களஞ்சியத்தில்