wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

செய்யுளும் மொழியணியும்

Total questions: 5

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

1.தொடர்புடைய இணைமொழியைத் தெரிவு செய்க.

[ பாடத்தை முழுமை பெறாத நிலையில் செய்திருந்த வேல்விழியை ஆசிரியர் கண்டித்தார்.]

a)

ஆடிப்பாடி

b)

அங்கும் இங்கும்

c)

பழக்க வழக்கம்

d)

அரை குறை

2.

2.பாடலுக்குத் தொடர்புடைய உலகநீதியைத் தெரிவு செய்க.

[அம்மாவென்றழைக்காத உயிரியில்லையே

அம்மாவை வணங்காது உயர்வில்லையே}

a)

போகாத விடந்தனிலே போகவேண்டாம்

b)

மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்

c)

ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம்

d)

அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம்

3.

கூற்றுக்கு ஏற்ற உவமைத் தொடரைத் தெரிவு செய்க.

[என் மகன் வேலைக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டான்.இனி எனக்கு கவலையே இல்லை,என் துன்பம் நீங்கியது.]

a)

காட்டுத் தீ போல

b)

சூரியனைக் கண்ட பனி போல

c)

பசுத்தோல் போர்த்திய புலி போல

d)

குன்றின் மேலிட்ட விளக்குப் போல

4.

உரையாடலுக்கு ஏற்ற உவமைத் தொடரைத் தெரிவு செய்க.

[ சீதா!நாம் இன்றுபோல் என்றும் நெருங்கிய தோழிகளாகவே இருப்போம் ]

a)

நகமும் சதையும் போல

b)

மலரும் மணமும் போல

c)

எலியும் பூனையும் போல

d)

சிலை மேல் எழுத்துப் போல

5.

உரையாடலுக்குப் பொருத்தமான புதிய ஆத்திச்சூடியைத் தெரிவு செய்க.

[ தம்பி! நீ எதற்கும் பயப்படாதே.நீ கண்டிப்பாக வெற்றி வாகை சூடுவாய். ]

a)

ஓய்தல் ஒழி

b)

இளைத்தல் இகழ்ச்சி

c)

அச்சம் தவிர்

d)

ஏறுபோல் நட