wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் படிவம் 3 - உடன்பாட்டுவினை, எதிர்மறைவினை

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

கோடிட்ட சொல்லுக்கு ஏற்ற எதிர்மறைவினைச் சொல்லைத் தெரிவு செய்க.

பெருஞ்செல்வம் மட்டுமே வாழ்க்கைக்கு மகிழ்ச்சி தரும்.

a)

தாரா

b)

தரா

c)

தாரார்

d)

தரவில்லை

2.

கோடிட்ட சொல்லுக்கு ஏற்ற எதிர்மறைவினைச் சொல்லைத் தெரிவு செய்க.

கண்ணகி புலால் உண்டாள்.

a)

உண்டிலாள்

b)

உண்பாள்

c)

உண்ணாள்

d)

உண்பித்தாள்

3.

கோடிட்ட சொல்லுக்கு ஏற்ற எதிர்மறைவினைச் சொல்லைத் தெரிவு செய்க.

தன் மகன் தன்னைக் காப்பான் என அத்தாயுள்ளம் கனாக் கண்டது.

a)

காக்கிலன்

b)

காவான்

c)

காப்பிலன்

d)

காத்திலன்

4.

கோடிட்டசொல்லுக்கு ஏற்ற உடன்பாட்டுவினைச் சொல்லைத் தெரிவு செய்க.

அறிவுடையோர் எளியவர்களை இகழார்.

a)

இகழ்கிறார்

b)

இகழ்வர்

c)

இகழ மாட்டார்

d)

இகழ்ந்தார்

5.

சரியான எதிர்மறைவினையைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

அப்பா எனக்குப் பரிசு தந்தார்.

a)

அப்பா எனக்குப் பரிசு தரமாட்டார்.

b)

அப்பா எனக்குப் பரிசு தரார்.

c)

அப்பா எனக்குப் பரிசு தந்திலர்.

d)

அப்பா எனக்குப் பரிசு தரும்.

6.

சரியான எதிர்மறைவினைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

பசுக்கள் புல் மேய வரா.

b)

பசுக்கள் புல் மேய வாராது.

c)

பசுக்கள் புல் மேய வாரா.

d)

பசுக்கள் புல் மேய வரான.

7.

சரியான எதிர்மறைவினையைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

மாடுகள் திடலில் மேய்ந்தன.

a)

மாடுகள் திடலில் மேய்ந்தில.

b)

மாடுகள் திடலில் மேயும்.

c)

மாடுகள் திடலில் மேயா.

d)

மாடுகள் திடலில் மேய்ந்து கொண்டிருந்தன.

8.

சரியான எதிர்மறைவினையைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

கல்வி வாழ்க்கைக்கு முன்னேற்றம் தரும்.

a)

கல்வி வாழ்க்கைக்கு முன்னேற்றம் தந்தில.

b)

கல்வி வாழ்க்கைக்கு முன்னேற்றம் தரா.

c)

கல்வி வாழ்க்கைக்கு முன்னேற்றம் தராது.

d)

கல்வி வாழ்க்கைக்கு முன்னேற்றம் தரவல்லது.

9.

சரியான உடன்பாட்டுவினையைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

சூரிய ஒளி படாத பூச்செடிகள் செழித்து வளரா.

a)

சூரிய ஒளி படும் பூச்செடிகள் செழித்து வளரும்.

b)

சூரிய ஒளி படும் பூச்செடிகள் செழித்து வளராமை.

c)

சூரிய ஒளி படும் பூச்செடிகள் செழித்து வளர்கின்றன.

d)

சூரிய ஒளி படும் பூச்செடிகள் செழித்து வளர முடியாது.

10.

சரியான உடன்பாட்டுவினையைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

மதுமலர் முயற்சியுடன் படித்திலள்.

a)

மதுமலர் முயற்சியுடன் படித்தாள்.

b)

மதுமலர் முயற்சியுடன் படிப்பாள்.

c)

மதுமலர் முயற்சியுடன் படிக்கவில்லை.

d)

மதுமலர் முயற்சியுடன் படித்தார்கள்.

11.

சரியான உடன்பாட்டுவினையைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

கார்மேகன் கிராமத்தில் தீய செயல்களைச் செய்திலன்.

a)

கார்மேகன் கிராமத்தில் தீய செயல்களைச் செய்து கொண்டிருக்கிறான்.

b)

கார்மேகன் கிராமத்தில் தீய செயல்களைச் செய்ய மாட்டாள்.

c)

கார்மேகன் கிராமத்தில் தீய செயல்களைச் செய்யான்.

d)

கார்மேகன் கிராமத்தில் தீய செயல்களைச் செய்தான்.

12.

சரியான எதிர்மறைவினையைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

மறுநாள் வேட்டைக்காரன் அக்குகைக்குள் வந்தான்.

a)

மறுநாள் வேட்டைக்காரன் அக்குகைக்குள் வந்திலன்.

b)

மறுநாள் வேட்டைக்காரன் அக்குகைக்குள் வாரான்.

c)

மறுநாள் வேட்டைக்காரன் அக்குகைக்குள் வாரார்.

d)

மறுநாள் வேட்டைக்காரன் அக்குகைக்குள் வரான்.

13.

கோடிட்ட சொல்லுக்கு ஏற்ற எதிர்மறைவினைச் சொல்லைத் தெரிவு செய்க.

பானுமதி அம்மையார் காய்கறி சமைத்தார்.

a)

சமைக்க மாட்டார்

b)

சமைத்திலர்

c)

சமையார்

d)

சமைப்பார்

14.

கோடிட்ட சொல்லுக்கு ஏற்ற எதிர்மறைவினைச் சொல்லைத் தெரிவு செய்க.

தந்தையின் தன்னலமற்ற உயர்ந்த எண்ணத்தை மலர்வண்ணன் உணர்வான்.

a)

உணர்ந்திலன்

b)

உணரான்

c)

உணரமாட்டான்

d)

உணர்வான்