wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

புத்திக் கூர்மை

Total questions: 5

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

இவற்றில் எந்தப் பல்வகைச் செய்யுளை இன்று நீங்கள் கற்றறிந்தீர்கள்?

a)

நளவெண்பா (நளனது நல்லாட்சி)

b)

குறுந்தொகை (அன்பின் திறம்)

c)

விவேக சிந்தாமணி (புத்திக் கூர்மை)

d)

சிலப்பதிகாரம் (கற்புத் தெய்வம்)

2.

'புத்தியுள்ளவன் பலமுள்ளவன் ஆவான்' என்ற இந்த விளக்கத்தைக் கொண்டிருக்கும் செய்யுளடி எது?

a)

மற்றொரு சிங்கந் தன்னை வருமுயல் கூட்டிச் சென்றே

b)

உற்றதோர் கிணற்றில் சாயல் காட்டிய வுவமை போல

c)

எத்தனை விதத்தி னாலு மிடரது வந்தே தீரும்

d)

புத்திமான் பலவா னாவான் பலமுளான் புத்தி யற்றால்

3.

புத்திமான் பலவா னாவான் பலமுளான் புத்தி யற்றால்

............................................................................................

மற்றொரு சிங்கந் தன்னை வருமுயல் கூட்டிச் சென்றே

உற்றதோர் கிணற்றில் சாயல் காட்டிய வுவமை போல

a)

எத்தனை விதத்தினாலும் இடரானது வந்தே தீரும்.

b)

எந்த விதத்திலும் இடரது வந்தே தீரும்

c)

எத்தனை விதத்தி னாலு மிடரது வந்தேதீரும்

d)

எந்த விதத்தி னாலு மிடரானது வந்தேதீரும்

4.

விவேக சிந்தாமணியின் வழி கூறவரும் கருத்தென்ன?

a)

புத்தியுள்ளவன் பலமுள்ளவன் ஆவான்.

b)

வலிமை உள்ளவனுக்குப் புத்தியில்லாவிட்டால் எந்த விதத்திலும் துன்பம் வந்தே தீரும்.

c)

வலிமை உள்ளவனுக்குப் புத்தியில்லாவிட்டால் எந்த விதத்திலும் இன்பம் வந்தே தீரும்.

d)

புத்தியுள்ளவன் பலமுள்ளவன் ஆவான். வலிமை உள்ளவனுக்குப் புத்தியில்லாவிட்டால் எந்த விதத்திலும் துன்பம் வந்தே தீரும்.

5.

'புத்திமான் பலவா னாவான் பலமுளான் புத்தி யற்றால்

எத்தனை விதத்தி னாலு மிடரது வந்தேதீரும்

மற்றொரு சிங்கந் தன்னை வருமுயல் கூட்டிச் சென்றே

உற்றதோர் கிணற்றில் சாயல் காட்டிய வுவமை போல'


என்ற செய்யுளின் விளக்கம் என்ன?

a)

புத்தியுள்ளவன் பலமுள்ளவன் ஆவான். வலிமை உள்ளவனுக்குப் புத்தியில்லாவிட்டால் எந்த விதத்திலும் இன்பம் வந்தே தீரும். சிறுமுயல் ஒன்று தன் அறிவுடைமையினால் பலம் வாய்ந்த சிங்கம் ஒன்றை அழைத்துச் சென்று அதனுடைய பிம்பத்தையே கிணற்றினுள் காட்டி அதைக் கொன்றதைப் போன்று பலமற்றவர் தன் அறிவுக் கூர்மையால் பலமற்றவர்களையும் வெல்லலாம்.

b)

புத்தியுள்ளவன் பலமுள்ளவன் ஆவான். வலிமை உள்ளவனுக்குப் புத்தியில்லாவிட்டால் எந்த விதத்திலும் துன்பம் வந்தே தீரும். சிங்கம் ஒன்று தன் பலத்தினால் அறிவார்ந்த சிறுமுயல் ஒன்றை அழைத்துச் சென்று அதனுடைய பிம்பத்தையே கிணற்றினுள் காட்டி அதைக் கொன்றதைப் போன்று பலமுள்ளவர் தன் பலத்தால் பலமற்ற அறிவாளிகளையும் வெல்லலாம்.

c)

புத்தியுள்ளவன் பலமுள்ளவன் ஆவான். வலிமை உள்ளவனுக்குப் புத்தியில்லாவிட்டால் எந்த விதத்திலும் துன்பம் வந்தே தீரும். சிறுமுயல் ஒன்று தன் அறிவுடைமையினால் பலம் வாய்ந்த சிங்கம் ஒன்றை அழைத்துச் சென்று அதனுடைய பிம்பத்தையே கிணற்றினுள் காட்டி அதைக் கொன்றதைப் போன்று பலமற்றவர் தன் அறிவுக் கூர்மையால் பலமுள்ளவர்களையும் வெல்லலாம்.

d)

புத்தியுள்ளவன் பலமுள்ளவன் ஆவான். வலிமை உள்ளவனுக்குப் புத்தியிருந்துவிட்டால் எந்த விதத்திலும் துன்பம் வந்து சேராது. சிறுமுயல் ஒன்று தன் அறிவுடைமையினால் பலம் வாய்ந்த சிங்கம் ஒன்றை அழைத்துச் சென்று அதனுடைய பிம்பத்தையே கிணற்றினுள் காட்டினாலும் அறிவையும் பலத்தையுமுடைய சிங்கமானது அதன் பிம்பமென அறிந்து சிறுமுயலைக் கொன்றதைப் போன்று பலமற்றவர் தன் அறிவுக் கூர்மையால் பலமுள்ளவர்களையும் வெல்ல முயன்றாலும் பலத்தொடு புத்திக் கூர்மையைக் கொண்டிருப்பவர்களை வெல்வது கடினமாகும்.