Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Category A - Round 2

Total questions: 20

Worksheet time: 40mins

Name
Class
Date
1.

பூதத்தாழ்வார் திருக்கோவிலூர் மிருகண்டு முனிவர் ஆசிரமத்தில் பொய்கையாழ்வார் மற்றும் பேயாழ்வாருடன் இறைவனைத் தரிசித்த போது அவரைப் பற்றி .................. என நூறு பாடல்கள் பாடினார்.

a)

வையம் தகளியாய்

b)

ஆத்திச்சூடி

c)

கொன்றைவேந்தன்

d)

ஞானோபதேசம்

2.

பிறப்பற்ற நிலையை நோக்கிச் செல்வது என்னவென்று குறிப்பிடப்படுகிறது?

a)

முக்தி

b)

மரணம்

c)

அமைதி

d)

ஆன்ம நிலை

3.

வட மொழியில் 'வணக்கம்' என்ற பொருளை எச்சொல் வழங்குகின்றது?

a)

நமசிவ

b)

சிவ

c)

நம

d)

நமசிவாய

4.

திருமங்கையாழ்வார் ஆழ்வார்களில் அதிகக் கோவில்களை மங்கலாசனம் செய்தவர் என்ற சிறப்பினைப் பெறுகிறார். இவர் தன் வாழ்நாளில் தனியாக மொத்தம் எத்தனை கோவில்களை மங்கலாசனம் செய்துள்ளார்?

a)

108

b)

36

c)

82

d)

46

5.

மதுரகிரி ஆழ்வார் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து ஒரு கோயிலை மட்டும் மங்கலாசனம் செய்துள்ளார். அந்த கோயிலிலும் மதுரகிரி ஆழ்வார் பெருமானைப் பாடாமல் தன் குருவான ................ போற்றி பாடினார்.

a)

நம்மாழ்வார்

b)

திருமங்கை ஆழ்வார்

c)

குலசேகர ஆழ்வார்

d)

பெரியாழ்வார்

6.

திருப்பாணாழ்வாரின் வாழ்க்கை மூலம் நாம் அறியும் படிப்பினை என்ன?

a)

திருமானின் திருப்பாதம் பணிந்தால் நம் நினைகள் அனைத்தும் ஓடி போய் நம்மை என்றும் தொடாது

b)

இறைவன் முன் அனைவரும் சமமாகக் கருதப்படுவார்கள்

c)

நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ இறைவனை வழிபட வேண்டும்

d)

வாழ்க்கையில் பல நன்மைகளைப் பெற இறைவனை என்றும் வணங்க வேண்டும்

7.

திருஞானசம்பந்தருக்கு இவ்வுலகில் யாருக்கும் கிட்டாத வரம் கிடைத்தது. அவ்வரம் என்ன?

a)

சிவபெருமானின் அருளால் நோய் தீர்ந்து நலம் பெற்றது

b)

சிறு வயதில் தந்தையைக் காணாது அழுது கொண்டிருக்கும் பொழுது உமாதேவியார் சிவபெருமானுடன் தோன்றி இவருக்கு ஞானப்பாலூட்டியது

c)

இறைவன் முதியவர் வேடத்தில் வந்து தன் அடிமை என்று வாதிட்டு, திருமணத்தை நிறுத்தித் தடுத்து

d)

இறைவன் ஞானாசிரியனாக வெளிப்பட்டு உபதேசம் செய்யும் வாய்ப்பினைப் பெற்றது

8.

திருஞானசம்பந்தரின் சமூகப் பணியை அடையாளமிடுக.

I கொல்லிமழவன் மகளின் முயலகன் எனும் நோயை போக்கியது

II வெம்பு நோயால் துடித்த கண்பாண்டியனைத் திருநீற்று பதிக்கம் பாடி உய்யசெய்த்தது

III பாம்பின் தீட்டலினால் மரணம் அடைந்த வணிகனின் மகளின் துன்பத்தை நீக்க இறைவனைப்பாடி வணிகனை உயிர்ப்பித்தது

IV சமனப் பள்ளிகளை இடித்து திருவதிகையில் அழியாத பொருட்களால் ஆன "குணபரஈச்சரத்தை" அமைப்பித்தவர்

a)

I மற்றும் II

b)

I மற்றும் IV

c)

I, III மற்றும் IV

d)

I, II மற்றும் III

9.

மாணிக்கவாசகரின் சமூகப் பணிகளைத் தேர்ந்தெடுக்கவும்.

I திருப்பெருந்துறை சிவாலயத்தில் செய்வ தொண்டு புரிவதில் பொருள்கள் எல்லாம் வழங்கியது

II பெளத்த மன்னனின் மகளின் ஊமையதன்மையை இறை திருவருளினால் நீக்கி அவளைப் பேசச்செய்தது

III சமுதாயத்திற்குத் திருவாசகம் அளித்தது

a)

I

b)

I மற்றும் II

c)

I, II மற்றும் III

d)

I மற்றும் III

10.

'கண்ணிநுன் சிறுத்தாம்பு' என்ற திவ்ய பிரபந்த பாடல் எந்த ஆழ்வாரை நோக்கி பாடப்பட்டது?

a)

பூதத்தாழ்வார்

b)

மதுரகவி ஆழ்வார்

c)

நம்மாழ்வார்

d)

பேயாழ்வார்

11.

திருமாலின்‌‌ மார்பில் இருக்கும் கொளஸ்துப அம்சத்தின் வடிவாக தோன்றிய ஆழ்வார்‌‌ யார்?

a)

குலசேகர‌ ஆழ்வார்

b)

பூதத்தாழ்வார்

c)

மதுரகவி ஆழ்வார்

d)

நம்மாழ்வார்

12.

அரசனின்‌ சந்தேகம்‌ போக்கி பொற்கிழியைப்‌ பரிசாய்ப் பெற்ற ஆழ்வார் யார்?

a)

பெரியாழ்வார்

b)

ஆண்டாள்

c)

திருப்பாணாழ்வார்

d)

பேயாழ்வார்

13.

வீரட்டானத்துரை அம்மானைப் போற்றி‌ப் பாடியவர்‌ யார்?

a)

திருஞானசம்பந்தர்

b)

சுந்தரரமூர்த்தி‌‌ நாயனார்

c)

மாணிக்கவாசகர்

d)

திருநாவுக்கரசர்

14.

திருநாவுக்கரசருக்குப் பெற்றோர் இட்ட பெயர் என்ன?

a)

ஆளுடைய பிள்ளையார்

b)

மருள்நீக்கியார்

c)

முத்தமிழ் விரகர்

d)

தெய்வசிகாமணி

15.

உருத்திராக்கம் சிலரால் உருத்திராட்சம் என்றும் அழைக்கக்கடும்.

a)

சரி

b)

தவறு

16.

உருத்திராக்கம் எதிலிருந்து உருவானதாகக் கூறப்படுகிறது?

a)

ஜடாமுடி

b)

நெற்றிக் கண்

c)

பிறை

d)

திரிசூலம்

17.

இவற்றுள் எது விக்கிரகங்களின் அமைப்பு முறையாகும்?

I அசல விக்கிரகம் 

II சல விக்கிரகம்

III சலாசல விக்கிரகம்

a)

I மற்றும் II 

b)

II மற்றும் III

c)

I மற்றும் III

d)

அனைத்தும்

18.

இவற்றுள் எந்த இசைக்கருவி தோற்கருவிப் பிரிவை சார்ந்தது அல்ல?

a)

சங்கு மற்றும் யாழ்

b)

முரசு மற்றும் பறை

c)

முழவு மற்றும் உடுக்கை

d)

கிணை மற்றும் மத்தளம்

19.

நாட்டார் கலையில் மிகச் சிறப்பாக விளங்கும், வில்லுப்பாட்டு மொத்தம் எத்தனை ஆட்களை கொண்டு இயற்றப்படும்?

a)

10

b)

7

c)

9

d)

5

20.

"கையில் ஆளுக்கொருக் கைக்குட்டையைப் பிடித்து இருப்பர். நுனியில் பிடித்து அதை அழகாக வீசியபடியேப்  பாடி ஆடுவர்." எனும் இக்கூற்று நாட்டார் கலையில் கீழ் வரும்  எக்கலையைக் குறிக்கின்றது.

a)

கரகம்

b)

வில்லுப்பாட்டு

c)

ஒயிலாட்டம்

d)

காவடி