NEW
Font size
Worksheetsபாடம் 15-09-2022 படிவம் 2
Total questions: 15
Worksheet time: 8mins
வகுப்பில் ___________ வென்று பேசிக் கொண்டிருந்த மாணவர்களை ஆசிரியர் திட்டினார்.
விறு விறு
சட சட
திமு திமு
தொண தொண
காலை வேளையில் மாடுகள் _________வெனத் தொழுவங்களிலிருந்து வெளியேறி, மேய்ச்சலுக்குச் செல்லும்.
தொண தொண
சட சட
திமு திமு
விறு விறு
அம்மா, வீட்டு வேலைகளை ________வெனச் செய்து முடித்த பின்னர் நாளிதழ்களைப் படிக்கத் தொடங்குவார்.
சட சட
தொண தொண
விறு விறு
திமு திமு
பலத்த காற்றினால் பள்ளியிலுள்ள மரக்கிளைகள் ________வென முறிந்து வாகனத்தின் மேல் விழுந்தன.
விறு விறு
சட சட
திமு திமு
தொண தொண
இந்தத் தொழிலை இன்னின்ன காரணத்தால் இவன் செய்து முடிக்கத் தக்கவன் என்பதை ஆராய்ந்தறிந்து அத்தொழிலை அவனிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்
தோட்டத்தில் __________ இருந்த மல்லிகைச் செடிக்கு அம்மா நீர் பாய்ச்சினார்.
உள்ளும் புறமும்
வாடி வதங்கி
ஆடிப்பாடி
நாணிக் கோணி
தங்கையின் பிறந்த நாள் விழாவில், சிறுவர்கள் மேடையில் ____________ மகிழ்ந்தனர்.
ஆடிப்பாடி
வாடி வதங்கி
உள்ளும் புறமும்
நாணிக் கோணி
மாப்பிள்ளை வீட்டிற்கு வந்தவுடன் என் அக்கா வெட்கத்தால் ___________ அமர்ந்திருந்தாள்.
சட்ட திட்டம்
வாடி வதங்கி
ஆடிப்பாடி
நாணிக் கோணி
நெடுஞ்சாலையில் சாலை விபத்துகளைக் குறைக்க ____________ பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்த வேண்டும்.
வாடி வதங்கி
சட்ட திட்டம்
உள்ளும் புறமும்
நாணிக் கோணி
கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு மிகப் பொருத்தமான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
ஆயிரக்கணக்கானவர்கள் அறிவியல் கண்காட்சியைக் காண புக்கிட் ஜாலில் விளையாட்டு அரங்கத்தில் திரண்டிருந்தனர்.
புற்றீசல் போல
அழகுக்கு அழகு செய்வது போல
நுனிப்புல் மேய்ந்தாற் போல
கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல
கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ப உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
பிரதமர் அறிவித்துள்ள ஒன்பதாவது மலேசியத் திட்டம் நம் நாட்டின் விவசாயத்துறையை மேலோங்கச் செய்யும் என்பது ____________________ தெளிவாகத் தெரிகிறது.
கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல
உள்ளங்கை நெல்லிக்கனி போல
நுனிப்புல் மேய்ந்தாற் போல
அழகுக்கு அழகு செய்வது போல
விளக்கத்திற்குப் பொருத்தமான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
ஒரு செய்தி மிகவும் தெள்ளத்தெளிவாக வெளிப்படுதல்.
நுனிப்புல் மேய்ந்தாற் போல
உள்ளங்கை நெல்லிக்கனி போல
கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல
புற்றீசல் போல
திரு. அருள்நாதர் தாம் சந்திக்க நினைத்த நண்பர் நேரில் வந்தபோது மிகவும் மகிழ்ந்தார்.
உள்ளங்கை நெல்லிக்கனி போல
புற்றீசல் போல
கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல
அழகுக்கு அழகு செய்வது போல
இணையப் பயன்பாட்டை ஆழமாகக் கற்றறியாத அமுதா அதன் தொடர்பாகப் பிறரிடம் பேசத் தொடங்கினாள்.
நுனிப்புல் மேய்ந்தாற் போல
அழகுக்கு அழகு செய்வது போல
புற்றீசல் போல
உள்ளங்கை நெல்லிகனி போல
அந்த அழகான மணப்பெண்ணை மேலும் கவர்ச்சியாகவும் அழகாகவும் அலங்காரம் செய்தனர் அவளின் தோழியர்.
புற்றீசல் போல
நுனிப்புல் மேய்ந்தாற் போல
அழகுக்கு அழகு செய்வது போல
கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல
